தமிழகம்

கரூர் கோயில்களுக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: கரூர் மாவட்​டத்​தில் 4 கோயில்​களுக்கு சொந்​த​மான 3,084.95 ஏக்​கர் நிலத்தை பத்​திரப்​ப​திவு செய்ய விதிக்​கப்​பட்​டிருந்த தடையை நீக்கி பத்​திரப்​ப​திவுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சி​யர் பிறப்​பித்த உத்​தரவுக்கு உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தடை விதித்​துள்​ளது.

சேலத்​தைச் சேர்ந்த ராதாகிருஷ்​ணன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: கரூர் மாவட்​டத்​தில் பாலசுப்​பிரமணிய சுவாமி கோயில், கல்​யாண பசுப​தீஸ்வரர் கோயில் உள்​பட 4 கோயில்​களுக்கு சொந்​த​மான 3,084.95 ஏக்​கர் இனாம் நிலங்​கள் 15 கிராமங்​களில் உள்​ளன. இந்த நிலங்​களை பத்​திரப்​ப​திவு செய்ய பதிவுத்​துறை தடை விதித்​தது. கோயில்​களுக்கு சொந்​த​மான நிலங்​களை பாது​காக்க வேண்​டும் என்ற அடிப்​படை​யில் 3,071 சர்வே எண்​களில் உள்ள இனாம் நிலங்​கள் பத்​திரப்​ப​திவுக்​கான தடை பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டன.

இந்த நிலங்​களை ஆக்​கிரமித்து அனுபவித்து வந்த சுமார் 3,390 பேர் பத்​திரப்​ப​திவுக்​கான தடையை நீக்​கக்​கோரி மாவட்ட ஆட்​சி​யரிடம் மனு அளித்​தனர். இந்த மனு அடிப்​படை​யில் பத்​திரப்​ப​திவுக்​கான தடையை நீக்கி மாவட்ட ஆட்சி​யர் ஜூலை 9-ல் உத்​தர​விட்​டுள்​ளார். இது கோயில் நில ஆக்​கிரமிப்​பாளர்​களுக்கு ஆதர​வான நட​வடிக்​கை​யாகும். இத​னால் கோயிலுக்​குச் சொந்​த​மான நிலங்​கள் முழு​மையாக ஆக்​கிரமிக்​கப்​படும் வாய்ப்பு ஏற்​பட்​டுள்​ளது.

எனவே, கரூர் மாவட்​டத்​தில் 3,084.95 ஏக்​கர் இனாம் நிலங்​களை பதிவு செய்த பத்​திரப்​ப​திவுத் துறை விதித்​திருந்த தடையை நீக்​கி​யும், பத்​திரப்​ப​திவு செய்ய அனுமதி வழங்​கி​யும் கரூர் மாவட்ட ஆட்சி​யர் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​தும், அது​வரை ஆட்​சி​யரின் உத்​தரவை செயல்​படுத்த தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனுவில் கூறப்​பட்​டிருந்​தது.

இதே கோரிக்​கைக்​காக சென்​னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், பி.பாஸ்​கர் ஆகியோ​ரும் மனு தாக்​கல் செய்​திருந்​தனர். இந்த மனுக்​கள் அனைத்​தையும் நீதிப​தி​கள் வேல்​முருகன், ராமகிருஷ்​ணன் அமர்வு நேற்று விசா​ரித்​தது.

மனுதா​ரர்​கள் தரப்​பில் கோயில் நிலங்​களை பதிவு செய்ய பலர் பதிவுத்​துறை அலு​வல​கங்​களில் விண்​ணப்​பித்து பதிவுக்​காக காத்​திருக்​கின்​றனர். இத​னால் பதிவுக்கு தடை விதிக்க வேண்​டும் எனக் கூறப்​பட்​டது. அரசு தரப்​பில், கோயில் இனாம் நிலங்​களை மீண்​டும் அரசு வசப்​படுத்​தவும், அவற்றை உரிமையாளர்​களுக்கு வழங்​கு​வது தொடர்​பாக விசா​ரணை நடத்தி உத்​தரவு பிறப்​பிக்​கவும் மாவட்ட ஆட்​சி​யருக்கு சட்​டப்​படி அதி​காரம் உள்​ளது எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், ‘பதிவுக்கு அனுமதி வழங்​கினால் சிறுக சிறுக பணம் சேர்த்து, வாழ்க்​கையை பணயம் வைத்து கோயில் நிலத்தை வாங்​கிய பின்​னர் பிற்​காலத்​தில் பிரச்​சினை ஏற்​பட்​டால் வாங்​கிய சொத்தை மக்​கள் இழக்க வேண்​டிய நிலை ஏற்​படும். இத​னால் சொத்​துக்​களை வாங்​கும் நிலை​யிலுள்ள அப்​பாவி மக்​கள் ஏமாறக் கூடாது. கோயில் நிலப் பதிவுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சி​யர் பிறப்​பித்த உத்​தரவுக்கு தடை விதிக்​கப்​படு​கிறது’ என்​றனர்.

அரசு தரப்​பில், ‘மனுதா​ரர் உள்​நோக்​கத்​துடன் வழக்கு தொடர்ந்​துள்​ளார். பத்​திரப்​ப​திவு எது​வும் தற்​போது நடை​பெறவில்லை. அப்​படி​யிருக்​கும்​போது பத்​திரப்​ப​திவு செய்​யப்​போவ​தாக கூறி நீதி​மன்​றத்​தில் தவறான தகவலை தெரி​வித்​துள்​ளார். இதில் உள்​நோக்​கம் உள்​ளது’ எனக் கூறப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி​கள், ‘எந்த உள்​நோக்​கமும் இல்லை. பதிவுக்கு அனுமதித்​தால் வழக்கு முடிந்து விடும். இதை அனுமதிக்க முடி​யாது. அப்​பாவி மக்​கள் பாதிக்​கப்​படக் கூடாது என்​ப​தற்​காக தடை விதிக்​கப்​படு​கிறது. அப்​படி​யிருக்​கும்​போது பத்​திரப் பதிவுக்​கான தடையை நீக்க வேண்​டும் என்​ப​தில் அரசு ஏன் இவ்​வளவு ஆர்​வ​மாக இருக்க வேண்​டும். எனவே மறுஉத்​தரவு வரும் வரை கரூர் கோயில் நிலங்​கள் பத்​திரப்​ப​திவுக்கு தடை விதிக்​கப்​படு​கிறது. அனைத்து தரப்​பினரும் பதில் மனு தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை நவ. 24-க்கு தள்ளி வைக்​கப்​படு​கிறது’ என உத்​தர​விட்​டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT