தமிழகம்

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை, செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​பு உள்​ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: கிழக்கு திசை​யில் இருந்து மேற்கு நோக்கி நகரும் வளிமண்டல அலை நிகழ்வு தற்​போது நில​வு​கிறது. மேலும் தென்​னிந்​திய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நில​வு​கிறது.

இதன் காரண​மாக இன்று(ஜன.24) கடலோர தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும், உள் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

          

சென்​னை, செங்​கல்​பட்​டு,காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், கடலூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் கனமழை பெய்ய வாய்ப்​பு உள்​ளது. நாளை (25-ம் தேதி) தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், 26-ம் தேதி தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், கடலோர தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்​யக் கூடும்.

27 முதல் 29-ம் தேதி வரை தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் வறண்ட வானிலை நில​வக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்னலுடன் மித​மானது முதல் கனமழை பெய்​யக்​கூடும்.

இன்​றும், நாளை​யும் தமிழக கடலோரப் பகு​தி​கள்,மன்​னார் வளை​குடா, குமரிக்​கடல் பகு​தி​களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக்​காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம். இவ்​வாறு வானிலை ஆய்வு மைய செய்​திக்​குறிப்பில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT