தமிழகம்

தமிழகத்திலுள்ள 25 மாநகராட்சிகளில் அதிக அதிகாரம் யாரிடம் உள்ளது? - பேரவையில் காரசார விவாதம்

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேர​வை​யில் நேற்று வேளாண்மை உள்​ளிட்ட துறை​களின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்​தில் மதுரை மேற்கு தொகுதி தவெக எம்​எல்ஏ தங்​க​பாண்டி பேசும்​போது, “எனது தொகு​தி​யில் கழி​வுநீர், குடிநீர் வசதி​கள் இல்​லை.

எங்​கள் பணம் எங்கே போனது? மதுரை மாநக​ராட்​சி​யில் சொத்​து​வரி மதிப்​பீட்​டில் ரூ.200 கோடி ஊழல் நடை​பெற்​றுள்​ளது” என்​றார்.

அதைத் தொடர்ந்து நடை​பெற்ற விவாதம் வரு​மாறு:

கே.என்​.நேரு (தி​முக): சொத்​து​வரி மதிப்​பீடு முறை​கேடு தொடர்​பாக 5 பேர் பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். மேயர் நீக்​கப்​பட்​டுள்​ளார். குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளானவர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அதுதொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் உள்​ளது. உரிய நடவடிக்கை எங்​கள் அரசு எடுத்​துள்​ளது. நடவடிக்கை எடுக்​கா​விட்​டால்​தான் குற்​றம்.

அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா: மதுரை மாநக​ராட்சி ஊழலில் ஊறிப்​போய் உள்​ளது. ஊழல் தொகை ரூ.200 கோடி கைப்​பற்​றப்​பட​வில்​லை. தமிழகத்​தில் அனைத்து மாநக​ராட்​சிகளி​லும் ஊழல் நடை​பெற்​றுள்​ளது.

கே.என்​.நேரு: ஆட்​சி​யும், அதி​கார​மும், காவல்​துறை​யும் உங்​களிடம் உள்​ளது. விசா​ரித்து நடவடிக்கை எடுக்க வேண்​டியது​தானே?

அமைச்​சர் சிடிஆர். நிர்​மல்​கு​மார்: மின் இணைப்பை வணி​கத்​துக்கு பெற்​றுக்​கொண்​டு, சொத்து வரியை குடி​யிருப்​புக்​கான​தாக நிர்​ண​யிக்​கப்​பட்​டதை ஒப்​பிடும்​போது​தான் இந்த ஊழல் வெளி​யில் வந்​தது.

கடந்த 2 மாதங்​களாக மதுரை மாநக​ராட்சி முழு​வதும் சொத்​து​வரி மற்​றும் மின் இணைப்பு மறும​திப்​பீடு செய்​யப்​பட்டு வரு​கிறது.

சென்​னை​யிலும் சொத்​து​வரி மறும​திப்​பீடு செய்​யப்​பட்​டது திசை திருப்​பப்​பட்​டது. தவறு செய்​தவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

கே.என்​.நேரு: உங்​கள் ஆட்​சி​யில் இது​போன்ற குற்​றச்​சாட்​டு​கள் இல்​லாமல் பார்த்​துக்​கொள்​ளுங்​கள். ஓராண்டு கழித்து நாங்​கள் உங்​கள் குறை​களைச் சொல்ல நேரிடும்.

தங்​க​பாண்டி (தவெக): 30 ஆண்டு ஆட்சி செய்​திருக்​கிறோம், நீண்ட வரலாறு இருக்​கிறது என்​கிறீர்​களே, ஆனால் மதுரை​யில் அடிப்​படை வசதி​கள்​கூட இல்​லை. சாக்​கடை, குப்​பை, குடிநீர் பிரச்​சினை​கள் இருக்​கின்​றன.

ஆதவ் அர்​ஜு​னா: தமிழகத்​தில் குடத்​துடன் தாய்​மார்​கள் குடிநீருக்​காக லாரி​களை எதிர்​பார்த்​துக் காத்​திருக்​கின்​றனர். குழாய் மூலம் குடிநீர் கொடுக்க முடி​யாத நிலை இருக்​கிறது.

25 மாநக​ராட்​சிகளும் உங்​கள் (தி​முக) கட்​டுப்​பாட்​டில்​தான் உள்​ளது. முதல்​வரின் துறை​யில் நிதி ஒதுக்​கி​னாலும் அதை செயல்​படுத்​து​மிடத்​தில் மேயர்​கள், மண்​டலக்​குழு தலை​வர்​கள், நகராட்சி தலை​வர்​கள்​தான் உள்​ளனர்.

தமிழகத்​தில் அரசும், அதி​கார​மும் மாறி​னாலும், உள்​ளாட்சித் துறை​யில் இன்​னும் அதி​காரம் மாறாத​தால்​தான் எந்த பணி​யும் நடை​பெற​வில்​லை. அடுத்த 7 மாதங்​களில் நடை​பெற உள்ள உள்​ளாட்சி தேர்​தலில் 100 சதவீதம் நாங்​கள்​தான் வெல்​வோம்.

உள்​ளாட்சி தேர்​தல் முடிந்​த​பிறகு, 25 மாநக​ராட்​சிகளி​லும் மேயர்​கள் மாறும்​போது எல்லா ஊழல் ஆதா​ரங்​களும் வெளி​யில் வரும்.

கே.என்​.நேரு: தமிழகத்​தில் நாளொன்​றுக்கு 2,500 மில்​லியன் லிட்​டர் குடிநீர் வழங்​கிய நிலை​யில், புதிய திட்​டங்​கள் மூல​மாக 4 ஆயிரம் மில்​லியன் லிட்​டர் குடிநீர் விநி​யோகிக்​கப்​பட்டு வரு​கிறது.

எங்​கள் மேயர்​கள் இருந்​தா​லும், மாநக​ராட்​சிகள் ஸ்தம்​பித்​து​போய் உள்​ளன. இதைக் கண்​டித்து சென்னை மாநக​ராட்சி மன்​றத்​தில் கவுன்​சிலர்​கள் கருப்பு உடை​யுடன் பங்​கேற்​றுள்​ளனர்.

கவுன்​சிலரோ, மேயரோ அரசின் திட்​டத்தை செயல்​படுத்த தவறி​னால் ஆணை​யரே அத்​ திட்​டத்​தை செயல்​படுத்​த அதி​காரம்​ உள்​ளது. இவ்​வாறு விவாதம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT