தமிழகம்

19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்

செய்திப்பிரிவு

சென்னை: தென்​னிந்​திய பகு​தி​களில் தெனமேற்கு பரு​வ​மழை குறை​வாக உள்​ளது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று வேலூர், மதுரை உள்​ளிட்ட 19 மாவட்​டங்​களில் வெப்ப அலை வீசும். நாளை முதல் பரு​வ​மழை படிப்​படி​யாக முன்​னேற வாய்ப்புள்​ள​தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

உள் தமிழகத்​தின் சில பகு​தி​கள், ஆந்​திரப் பிரதேசம் மற்​றும் தெலங்​கா​னா​வின் சில பகு​தி​களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்​சரிக்​கை விடுத்துள்​ளது.

காற்று பகுப்​பாய்​வின்​படி, தற்​போது பலவீன​மாக உள்ள கீழ்​மட்ட ஜெட் காற்​று, நாளை (ஜூலை 17) முதல் படிப்​படி​யாக வலுப்​பெற வாய்ப்​புள்​ளது. இதன் காரண​மாக, பூமத்​திய ரேகை​யைத் தாண்டி அரபிக்​கடலிலிருந்து ஈரப்​ப​தம் வரு​வது அதி​கரித்​து, தென்​னிந்​திய பகு​தி​களில் தென்​மேற்கு பரு​வ​மழை மீண்​டும் படிப்​படி​யாக வலுப்​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதன் விளை​வாக, நாளை முதல் கேரளம், கர்​நாடகம், தமிழகம் மற்​றும் அதனை ஒட்​டிய பகு​தி​களில் மழைப்​பொழிவு படிப்​படி​யாக அதி​கரிக்​கும் வாய்ப்​புள்​ளது. மேகமூட்​டம் மற்​றும் மழைப்​பொழிவு அதி​கரிப்​ப​தால், தரையை அடை​யும் சூரியக் கதிர்​வீச்சு குறைந்​து, அதி​கபட்ச வெப்​பநிலை மீண்​டும் இயல்​பான நிலைக்கு திரும்​பும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனால், உள் தமிழகம், ஆந்​திரப் பிரதேசம் மற்​றும் தெலங்​கா​னா​வின் சில பகு​தி​களில் தற்​போது நிலவி வரும் வெப்ப அலை நிலை வாரத்​தின் 2-ம் பாதி​யில் படிப்​படி​யாக குறை​யும் வாய்ப்​புள்​ளது.

தமிழகத்​தில் இன்​றும், நாளை​யும் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 7 டிகிரி பாரன்​ஹீட் வரை உயரக்​கூடும். குறிப்​பாக தமிழகத்​தில் இன்று திருப்​பத்​தூர், வேலூர், ராணிப்​பேட்​டை, கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, காஞ்​சிபுரம், கிருஷ்ணகிரி, தரு​மபுரி, சேலம், நாமக்​கல், கரூர், ஈரோடு, திருச்​சி, அரியலூர், பெரம்​பலூர், சிவகங்​கை, விருதுநகர், திண்​டுக்​கல் மற்​றும் மதுரை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் வெப்ப அலை வீசக்​கூடும். இத்தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT