தமிழகம்

தாம்பரத்தில் சுகாதாரக் கண்காட்சி தொடக்கம்: பார்வையாளர்களை கவர்ந்த 52.8 அடி உயர ‘ஹெல்த் கொலு’

செய்திப்பிரிவு

தாம்பரம்: இந்​திய மருத்​து​வச் சங்​கத்​தின் (ஐஎம்ஏ) கிளை சார்​பில் தாம்​பரத்​தில் ‘நம்ம ஹெல்த் மெகா எக்​ஸ்போ 2026’ என்ற மூன்று நாள் சுகா​தா​ரக் கண்​காட்சி நேற்று தொடங்​கியது. இதில், 52.8 அடி உயரத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள ‘ஹெல்த் கொலு’ பார்வையாளர்களைக் கவர்ந்​துள்​ளது. பல்​வேறு மருத்​து​வத் துறைகள் சார்​பில் இலவச மருத்​து​வப் பரிசோதனை​களும் மேற்கொள்​ளப்​படு​கின்​றன.

இந்​திய மருத்​து​வச் சங்​கத்​தின் தாம்​பரம் கிளை பொன்​விழாவையொட்டி தொடங்​கப்​பட்​டுள்ள இந்த கண்​காட்​சி, அக்டோபர் 19-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இந்​திய மருத்​து​வச் சங்​கத்​தின் கவுரவ பொதுச்​செய​லா​ளர் அபுல் ஹசன் கண்காட்சியை தொடங்​கி​வைத்​தார். இதில் நரம்​பியல், இருதயவியல், மகப்​பேறியல் உள்​ளிட்ட பல்​வேறு மருத்​து​வத் துறை​களைச் சேர்ந்த 26 அரங்​கு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. 6 மருத்​து​வக் கல்​லூரி​கள், 50-க்​கும் மேற்​பட்ட மருத்​து​வ​மனை​கள், சுமார் 400 மருத்​து​வர்​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

நவராத்​திரி​யின் பாரம்​பரி​யத்​தை​யும் மருத்​துவ விழிப்புணர்வையும் இணைக்​கும் வகை​யில் 52.8 அடி உயரத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள ‘ஹெல்த் கொலு’, உலகின் மிக உயர​மான கொலு​வாக பதிவு செய்​யப்​படு​வதற்​காக ஆய்​வுக்கு உட்படுத்தப்பட உள்​ளது. இன்று நடை​பெறும் நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் டி.சரத்​கு​மார், பள்ளி மாணவர்​களுக்​கான ‘நல​மான பள்​ளி​கள்’ திட்​டத்​தைத் தொடங்கி வைக்​கிறார்.

மாணவர்​களுக்கு ஊட்​டச்​சத்​து, மனநலம், மாத​வி​டாய் ஆரோக்கியம், போதைப்​பொருள் தடுப்பு குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​தப்பட உள்​ளது. நிறைவு விழா​வில் பள்​ளிக் கல்​வித்​துறை அமைச்​சர் ராஜ்மோகன் பங்​கேற்​கிறார். பொது​மக்​கள் இலவச மருத்​து​வப் பரிசோதனை​களை பயன்​படுத்​திக் கொள்​ளு​மாறு நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள்​ கேட்​டுக்​கொண்​டுள்​ளனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT