உயர் நீதிமன்றம் மதுரை கிளை

 
தமிழகம்

சிறை கைதிகள் மத நம்பிக்கைக்காக வளர்க்கும் தலைமுடியை வெட்ட கட்டாயப்படுத்த கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: சிறை கைதி​கள் மத நம்​பிக்​கைக்​காக வளர்க்​கும் தலை​முடியை வெட்ட கட்​டாயப்​படுத்​தக் கூடாது என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

நெல்​லை​யைச் சேர்ந்த பேபி கமலம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: என் மகன் ஜேம்ஸ் செல்​லத்​துரை பாளை சிறை​யில் உள்​ளார். அவர் மத நம்​பிக்கை அடிப்​படை​யில் தலை​முடியை வளர்த்து வரு​கிறார். அவரது தலை​முடியை வெட்​ட​வும், மீசையை அகற்​ற​வும் சிறை நிர்​வாகம் வற்​புறுத்தி வரு​கிறது. இதைத் தவிர்க்​கு​மாறு, சிறை அதி​காரி​களுக்கு மனு அனுப்​பி​யும் முடி வெட்ட கட்​டாயப்​படுத்தி வரு​கின்​றனர்.

எனவே, தலை​முடியை வெட்​ட​வும், மீசையை அகற்​ற​வும் என் மகனை கட்​டாயப்​படுத்​தக் கூடாது என, சிறைத்​துறை அதி​காரி​களுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்​தி​ரா, பி.​முரு​கேசன் அமர்வு விசா​ரித்​தது. அரசு தரப்​பில், சிறை​யில் சுகா​தா​ரத்தைப் பராமரிக்​கும் வகை​யில், தமிழ்​நாடு சிறை விதி​யின்​படி கைதி​களின் தலை​முடி, நகங்​களை ஒழுங்​குப்​படுத்த அதி​காரி​களுக்கு அதி​காரம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

கைதி தலை​முடியை வளர்ப்​ப​தால், மற்ற கைதி​களின் சுகா​தா​ரத்​துக்கு பாதிப்பு ஏற்​பட்​டால் மட்​டுமே விதிப்​படி உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். அது​வரை மனு​தா​ரரின் மகனை தலை​முடியை வெட்ட கட்​டாயப்​படுத்​த​மாட்​டோம் எனக் கூறப்​பட்​டது.

இதைப் பதிவு செய்த நீதிப​தி​கள், மத நம்​பிக்​கைக்​காக தலை​முடி வளர்க்​கும் விசா​ரணைக் கைதியை சுகா​தார பாதிப்பு ஏற்​ப​டாதவரை முடியை வெட்​டு​மாறு சிறை நிர்​வாகம் கட்​டாயப்​படுத்த வேண்​டாம். இது தொடர்​பாக தமிழ்​நாடு சிறை விதி​கள் 204, விதி 213(3)-ஐ கண்​டிப்​பாகப் பின்​பற்ற வேண்​டும் என உத்​தர​விட்​டனர்.

SCROLL FOR NEXT