தமிழகம்

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரம்: ரயில்வே தலை​மைப் பொறியாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் தெற்கு ரயில்​வேக்கு சொந்​த​மான காலி​யிடங்​களில் உள்ள சீமைக்​ கரு​வேல மரங்​களை அகற்​று​வது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யாத ரயில்வே தலை​மைப் பொறி​யாளர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி விளக்​கமளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகம் முழு​வதும் உள்ள சீமைக்​கரு​வேல மரங்​களை அகற்ற உத்​தர​விடக்​கோரி மதி​முக பொதுச் செய​லாளர் வைகோ உள்​ளிட்ட பலர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​ தொடர்ந்​துள்​ளனர். இந்த வழக்​கு​களை கடந்​த​முறை விசா​ரித்த நீதிப​தி​கள், தமிழகம் முழு​வதும் உள்ள சீமைக்​கரு​வேல மரங்​களை அகற்​றும் வகை​யில் சுற்​றுச்​சூழல் பாதிப்பு இழப்​பீட்​டுக்​கான கனிமநிதியை இரு​வாரங்​களில் விடுவிக்க உத்​தர​விட்​டிருந்​தனர்.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிப​தி​கள் என்​.சதீஷ்கு​மார், ஜி.கே.​முத்​துகு​மார் ஆகியோர் அடங்​கிய சிறப்பு அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, வனத்​துறை தரப்​பி்ல் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் கே.சுரேந்​திரன், மாவட்ட வாரி​யாக சீமைக்​கரு​வேலமரங்​கள் அகற்​றப்​பட்டது தொடர்​பாக தமிழக அரசின் வரு​வாய் மற்​றும் பேரிடர் மேலாண்​மைத் துறை செயலரின் நிலை அறிக்​கையை தாக்​கல் செய்​தார்.

அதில், நீதி​மன்ற உத்​தர​வுபடி, நீர் நிலைகளில் உள்ள சீமைக்​கரு​வேல மரங்​களை அகற்ற முன்​னுரிமை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. மாவட்டக் குழு​வின் ஒப்​புதலைப் பெற்று சீமைக்​கரு​வேல மரங்​களை அகற்ற, அந்​தந்த மாவட்​டங்​களின் கனிம நிதியை பயன்​படுத்த உரிய நடவடிக்கை எடுக்க ஆட்​சி​யர்​கள் அறி​வுறுத்​தப்​பட்​டனர்.

மேலும், அகற்​றப்​படும் சீமைக் கரு​வேல மரங்​கள் தொடர்​பான தரவு​கள், அவ்​வப்​போது ஆய்வு செய்​யப்​படு​கிறது. அகற்​றும் பணி​களில் சுணக்​கம் ஏற்​படும் பகு​தி​களை கண்​டறிந்​து, அங்கு பணி​களை விரைவுப்​படுத்​த​வும் கண்​காணிக்​க​வும் அதி​காரி​களுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது எனத் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

அதையடுத்து நீதிப​தி​கள், ரயில்​வேக்கு சொந்​த​மான காலிஇடங்களில் உள்ள சீமைக்​கரு​வேல மரங்​களை அகற்​றியது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யாத ரயில்வே நிர்​வாகத்​துக்கு கண்​டனம் தெரி​வி்த்​தனர்.

பின்​னர் இதுதொடர்​பாக தெற்கு ரயில்வே தலை​மைப் பொறி​யாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்​கமளிக்க உத்​தர​விட்​டனர். மேலும், சில மாவட்​டங்​களில் மரங்​கள் அகற்​றப்​பட்​டது தொடர்​பான புள்ளி விபரங்​களுக்கு அதிருப்தி தெரி​வித்த நீதிப​தி​கள் வி​சா​ரணை​யை அடுத்​த மாதத்​துக்​கு தள்​ளி​வைத்​தனர்​.

SCROLL FOR NEXT