தமிழகம்

ஓமந்தூரார் தோட்டம் எம்எல்ஏ-க்கள் விடுதியில் பராமரிப்பு பணி டெண்டருக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்​டத்​தில் உள்ள சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களுக்​கான விடு​தி​யில் உள்ள அறை​களின் பராமரிப்​புப் பணி​களுக்கு பொதுப்​பணித் துறை டெண்​டர்கோரியது.

கடந்த பிப்​.28 அன்று கோரப்​பட்ட இந்த டெண்​டருக்​கான படிவங்​களை சமர்ப்​பிக்க 2 நாட்​கள் மட்​டுமே அவகாசம் அளிக்​கப்​பட்​டது. மேலும் டெண்​டரில் பங்​கேற்க விரும்​பும் ஒப்​பந்​த​தா​ரர்​கள் பொதுப்​பணித் துறை செயற்​பொறி​யாளரிடம் தள ஆய்வு சான்​றிதழ் பெற்று சமர்ப்​பிக்​க​வும் அறி​வுறுத்​தப்​பட்​டது.

          

அதன்​படி இந்த சான்​றிதழ் வழங்​கப்​ப​டாத​தால் டெண்​டர் நடை​முறை​களுக்கு தடை கோரி ஒப்​பந்​த​தா​ரர்​கள் இரு​வர் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கு நீதிபதி எம்​. தண்​ட​பாணி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர்​களுக்கு தள ஆய்வு சான்று வழங்​கப்​பட்​டு​விட்​ட​தாக அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் தெரி​வித்​தார்.

அதையேற்ற நீதிப​தி, டெண்​டர் நடவடிக்​கைகளுக்கு தடை விதிக்க மறுத்​து, டெண்​டர் நடவடிக்​கைகளைத் தொடர அனு​ம​தி​யளித்​து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT