உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

 
தமிழகம்

புத்தகக் கொள்முதல் முறைகேடு வழக்கு: 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: புத்​தகக் கொள்​முதல் முறைகேடு வழக்கு விசா​ரணை​யின் போது, “மூன்று ஐஏஎஸ் அதி​காரி​கள், உரிய ஆவணங்​களு​டன் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்க வேண்​டும்” என்று உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் பொது நூல​கங்​களுக்​குப் புத்​தகங்​கள் கொள்​முதல் செய்​வது தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு 2024-ல் உத்​தரவு பிறப்​பித்​தது. அந்த உத்​தரவை அமல்​படுத்​தாத அப்​போதைய நூல​கத் துறை இயக்​குநர் ஜெயந்தி மற்​றும் அதி​காரி​கள் மீது நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்​கக் கோரி, நெல்லை​யைச் சேர்ந்த ராமசுப்பு என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த வழக்கு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த போது, புத்​தகங்​கள் கொள்​முதல் தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாருக்கு உத்​தர​விடப்​பட்​டது. அதன்​படி, போலி நூல் சர்ச்​சையில் சிக்​கிய அகல்​விளக்கு பதிப்​பகத்​தின் உரிமையாளர் மோகன் உள்​ளிட்​டோர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. பதிப்​பகத்​தின் வங்​கிக் கணக்​கு​கள் முடக்​கப்​பட்​டன.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது அரசு தரப்​பில், “நூலக கொள்​முதலில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் விசா​ரணை தொடர்​பாகச் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்து விசா​ரணைக்கு எடுக்​கப்​பட்டு தள்ளி வைக்​கப்​பட்​டுள்​ளது” என்று கூறப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி​கள், “வழக்​குப் பதிவு செய்​வது தொடர்​பான கோரிக்​கைகளைச் சென்னை உயர் நீதி​மன்​றம் விசா​ரிக்​கட்​டும். நீதி​மன்ற அவ​மதிப்பு மட்​டும் இங்கு விசா​ரிக்​கப்​படும். இந்த வழக்கு தொடர்​பாக 5 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர். புத்​தகக் கொள்​முதலுக்​குப் பொறுப்​பானவர் ஒரு​வர் இருப்​பார். அவர் யார் என்​பதை தெரி​விக்க வேண்​டும்” என்​றனர்.

அரசு தரப்​பில், “புத்​தகங்​கள் கொள்​முதலுக்கு நூல​கத் ​துறை இயக்​குநர் ஜெயந்​திதான் பொறுப்பு” என கூறப்​பட்​டது. “அவர் மீது மட்​டும் நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்​கப்​படும். இது​மட்​டுமின்றி, அவர் மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டுகள் உள்​ளன. அவருக்​காக அரசு தரப்​பில் யாரும் ஆஜராக வேண்​டாம்” என நீதிப​தி​கள் கூறினர்.

இந்த வழக்​கில் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்ள சென்னை அண்ணா நூலக தலைமை நூல​கர் காமாட்சி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர், “ஒருங்​கிணைப்​புக் குழுத் தலை​வ​ராகக் காமாட்சி இருந்​துள்​ளார். அவருக்​கும் கொள்​முதலுக்​கும் எந்த சம்​பந்​தமும் கிடை​யாது. 137 பேர் கொண்ட பரிந்​துரை குழு அளிக்​கும் தகவல்​களை உயர்​மட்​டக் குழு​வுக்கு அனுப்​பும் பணியை மட்​டுமே செய்​துள்​ளார். அவரைப் பணி​யிடை நீக்​கம் செய்​துள்​ளனர். முறைகேட்​டில் தொடர்​புடைய உயர் அதி​காரி​கள் மீது நட​வடிக்கை எடுக்​க​வில்லை. கீழ்​நிலை அலு​வலர்​கள் மீது மட்​டும் நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

அப்​போது நீதிப​தி​கள், காமாட்சி எத்​தனை ஆண்​டுகளாக நூல​க​ராக பணிபுரி​கிறார் என்று கேள்வி எழுப்​பினர். அதற்கு, காமாட்சி 19 ஆண்​டுகளாகப் பணிபுரிந்து வரு​கிறார் என தெரி​விக்​கப்​பட்​டது. தொடர்ந்து நீதிப​தி​கள், “இத்​தனை ஆண்​டுகள் பணிபுரிந்​திருக்​கிறார் என்​றால் புத்​தகத்தை முகர்ந்து பார்த்​தாலே அது போலி புத்​தகம் என்​பதை கண்​டு​பி​டித்​திருக்​கலாமே. எழுத்​தாளர் பெரு​மாள் முருக​னால் போலி புத்​தகங்​களைக் கண்​டறிய முடியும் ​போது உங்​களால் முடி​யாதா?” என்​றனர்.

அதற்கு காமாட்சி தரப்பு வழக்​கறிஞர், “பெரு​மாள் முருக​னும் தேர்​வுக் குழு​வில் இருந்​தார். அவரும் அகல்​விளக்கு புத்​தகங்​களைப் பரிந்​துரை செய்​திருக்​கிறார். அதற்கு ஆதா​ரம் உள்​ளது” என்​றார். அதற்கு, “பெரு​மாள் முருகன் மீது குற்​றம் ​சாட்​டுவது சரியல்ல” என நீதிப​தி​கள் கூறினர்.

அதற்கு, “அவரை வேண்​டும் என்​றால் பிர​மாண பத்​திரம் தாக்​கல் செய்​யச் சொல்​லுங்​கள். பரிந்​துரை செய்​யப்​பட்ட புத்​தகங்​களின் பட்​டியலை உயர்​மட்​டக் குழு​வுக்கு அனுப்​பியது மட்​டுமே காமாட்​சி​யின் பணி. இது​தொடர்​பான மின்​னஞ்​சலை ஆய்வு செய்​தால் அனைத்து விவரங்​களை​யும் தெரிந்து கொள்​ளலாம். உண்​மையான குற்​றவாளி​களை​யும் கண்​டு​பி​டித்து விடலாம்” என காமாட்சி தரப்​பில் கூறப்​பட்​டது.

தமிழக அரசு தரப்​பில், “பரிந்​துரைக் குழு​வால் 26,000 புத்​தகங்​கள் பரிந்​துரை செய்​யப்​பட்​டன. இப்​பட்​டியலில் பரிந்​துரை செய்​யப்​படாத பல புத்​தகங்​களை ஒருங்​கிணைப்​புக் குழு சேர்த்து உயர்​மட்​டக் குழு​வுக்கு அனுப்​பியுள்​ளது. பெரியார் அறி​வுலக நூல​கம் தொடர்​பாக மட்​டுமே தற்​போது விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. பிற நூல​கங்​களில் இருந்து விவரங்​கள் கேட்​கப்​பட்​டுள்​ளன.

அகல் விளக்கு பதிப்​பகத்​தின் மோக​னுடைய மற்​றொரு வங்​கிக் கணக்கு கண்​டு​பி​டிக்​கப்​பட்டு அதை முடக்க நட​வடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. புத்​தகக் கொள்​முதல் டெண்​டர் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளது. வருங்​காலங்​களில் புத்​தகக் கொள்​முதலில் எந்த முறைகேடும் நடை​பெறாமல் இருக்க புதிய ஒருங்​கிணைந்த புத்​தக கொள்​முதல் கொள்கை 2 மாதங்​களில் வெளி​யிடப்​படும்” என கூறப்​பட்​டது.

மனுதா​ரர் தரப்​பில், “உயர்​மட்​டக் குழு இது​வரை வெளிச்​சத்​துக்கு வர​வில்லை. நீதி​மன்ற உத்​தரவுக்​குப் பிறகே குழு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. குழு​வினர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி எதற்​காக சர்ச்​சைக்​குரிய புத்​தகங்​களைத் தேர்வு செய்​தனர் என்​பதை விளக்க வேண்​டும். நூல​கத் துறை இயக்​குநராக இருந்த ஜெயந்தி மீது மட்​டும் அல்​லாமல் அப்​போது நூல​கத்​துறை​யின் முக்​கிய பொறுப்​பு​களில் இருந்த ஐஏஎஸ் அதி​காரி​கள் சந்​திரமோகன், ஆர்த்தி ஆகியோர் மீதும் நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்க வேண்​டும்” என வாதிடப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள், “ஐஏஎஸ் அதி​காரி​கள் சந்​திரமோகன், ஜெயந்தி, ஆர்த்தி ஆகியோர் நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றாமல் இருந்​ததற்​காக உங்​கள் மீது ஏன் நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்​கக் கூடாது என நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்க வேண்​டும். அப்​போது புத்​தகக் கொள்​முதல் தொடர்​பான அனைத்து ஆவணங்​களை​யும் தாக்​கல் செய்ய வேண்​டும். பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​ட​வர்​கள் உரிய நீதி​மன்​றத்தை நாடி நிவாரணம் பெறலாம். விசா​ரணை 4 வாரங்​களுக்கு தள்ளி வைக்​கப்​படு​கிறது” என உத்​தர​விட்​டனர்.

மதுரை எம்.​பி.யை குறிப்​பிட்டு நீதிபதி நகைச்​சுவை

சென்னை புத்​தக வெளியீட்டு விழா​வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசி​யதை மதுரை எம்.பி., சு.வெங்​கடேசன் விமர்​சித்து சமூக வலை​தளத்​தில் கருத்து பதி​விட்​டார். ‘சு.வெங்கடேசன் கார்ப்​பரேட் நிறு​வனத்​தைச் சேர்ந்​தவர் ​போல் ஆடம்​பர உடை, காலணி அணிந்து ஆடம்​பர காரில் ரயில் நிலை​யம் வந்​திறங்​கியதைப் பார்த்​தேன். நிச்​சய​மாகப் புத்​தக ராயல்டி தொகையைக் கொண்டு இப்​படியொரு வாழ்க்கை வாழ முடி​யாது’ என நீதிபதி குறிப்​பிட்​டார். இதை தனிமனித தாக்​குதல் என குறிப்​பிட்ட சு.வெங்​கடசேன், தனக்கு சொந்​த​மாகக் கார் கூட இல்லை என்​றும் கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், நேற்​றைய விசா​ரணை​யின் ​போது அண்ணா நூலக நூல​கர் காமாட்சி தொடர்​பாகப் பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘காமாட்சி நல்​ல​வர்​தானே?’ என அவர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞரிடம் கேட்​டார். அதற்கு மூத்த வழக்​கறிஞர், ‘நிச்​சய​மாக காமாட்சி நல்​ல​வர்​தான்’ என்​றார். உடனே நீதிபதி, ‘ஏன் கேட்​கிறேன் என்​றால், என் மனைவி​யின் பெயரும் காமாட்​சிதான். இப்​போது எனக்கு என்ன பயம் என்​றால், இது​குறித்​தும் சு.வி. (சு.வெங்​கடேசன்) ஏதாவது பேசி​விடுவாரோ என்​பது பற்​றிதான்” என நகைச்​சுவை​யாக குறிப்​பிட்​டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT