சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம் 
தமிழகம்

தேர்தல் வழக்குகள்: விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும்படி திமுக வேட்பாளர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், வாக்காளர் சிவராஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், “விஜய், ஆதவ் அர்ஜுனா மனுக்களுக்கு பதிலளிக்கும்படி தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்த திமுக வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT