தமிழகம்

தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதசாரிகள் நடக்க வழி ஏற்படுத்துவது அரசின் கடமை: ஐகோர்ட்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை​யில் நடைபாதை ஆக்​கிரமிப்​பு​களை அகற்​ற உத்​தர​விட வேண்​டும் எனக் கோரி ஷாஜூ அலெக்ஸ் என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், ஆர். ராஜேஷ் விவே​கானந்​தன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் வி.பி.ஆர்​.மேனனும், அரசு தரப்​பில் வழக்​கறிஞர்​கள் ஆர்​.​வி.​கா​யத்ரி மற்​றும் சி.பிர​பாகரன் உள்​ளிட்​டோர் ஆஜராகி வாதிட்​டனர்.

பின்​னர் நீதிப​தி​கள் வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: நடை​பாதைகள், சாலைகளை ஆக்​கிரமிப்​பது சட்ட விதி​மீறல். ஆக்​கிரமிப்​பு​கள் இல்​லாத முறை​யான நடை​பாதை மற்​றும் சாலை வசதி​கள் குடிமக்​களுக்​கான அடிப்​படை உரிமை. அந்த உரிமையை செய்து கொடுக்க வேண்​டிய உள்​ளாட்சி அமைப்​பு​களின் கடமை.

எனவே, தமிழக அரசின் தலை​மைச் செயலர், உள்​துறை முதன்​மைச் செயலர், காவல் துறை தலைமை இயக்​குநர், சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் மற்​றும் நகராட்சி நிர்​வாகத் துறை முதன்மை செயலர் உள்​ளிட்ட அரசு துறை​களின் அதி​காரி​கள், சென்னை மட்​டுமின்றி தமிழகம் முழு​வதும் வரையறுக்​கப்​பட்ட நடை​பாதைகளில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, பாத​சா​ரி​கள் மற்​றும் நடைப​யிற்சி மேற்​கொள்​பவர்​களுக்கு முறை​யான வழித்​தடத்தை உரு​வாக்கி கொடுக்க அனைத்து நடவடிக்​கைகளை​யும் சட்ட விதி​களுக்கு உட்​பட்டு உடனடி​யாக ஒருங்​கிணைந்து எடுக்க வேண்​டும்.

இதுதொடர்​பாக எடுக்​கப்​பட்ட நடவடிக்​கைகள் குறித்து டிச.10-க்​குள் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்​. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT