தமிழகம்

காவல்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக நடுவர்களுக்கான அதிகாரம் வழங்கும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

மதுரை: ​காவல்​துறை அதி​காரி​களுக்கு நிர்​வாக நடு​வர்​களுக்​கான அதி​காரம் வழங்​கும் அரசாணைக்கு விதிக்​கப்​பட்ட தடையை நீட்​டித்​தும், உள்​துறை செய​லா​ளர் பதிலளிக்​க​வும் உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரையைச் சேர்ந்த நல்​லதம்​பி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: காவல்​துறை அதி​காரி களுக்கு நிர்​வாக நடு​வருக்​கான (எக்​ஸ்​கியூட் மாஜிஸ்​திரேட்) அதி​காரங்​களை வழங்கி தமிழக உள்​துறை செயலர் கடந்த 2025 டிச.4-ல் அரசாணை பிறப்​பித்​துள்​ளார். காவல் துணை ஆணை​யர்​களுக்கு நிர்​வாக நடு​வர் அதி​காரம் வழங்​கு​வது சட்​ட​விரோத​மானது. ஜாமீன் விதி​மீறலுக்​காக ஒரு​வருக்கு தண்​டனை வழங்​கும் அதி​காரம் நீதித்​துறை சார்ந்​தது. அந்த அதி​காரங்​களை காவல் துறை அதி​காரி​களுக்கு வழங்​கு​வது அரசி​யலமைப்புச் சட்​டத்​தின் கொள்​கைக்கு எதி​ரானது.

மேலும் பிஎன்​எஸ்​எஸ் சட்​டத்​தின்கீழ் குறிப்​பிட்ட காலத்​துக்கு மட்​டுமே சிறப்பு நிர்​வாக நடு​வர்​களை நியமிக்க முடி​யும். இதை மீறும் வகை​யில் காவல்​துறை அதி​காரி​களுக்கு கால​வரம்பு இல்​லாமல் நீதித்​துறை நடு​வர் அதி​காரங்​களை வழங்கி இந்த அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

இது சட்​ட​விரோதம். இந்த அரசாணை குடிமக்​களின் தனி மனித சுதந்​திரத்தை பறிப்​பதுடன், அரசி​யலமைப்புச் சட்​டம் வழங்​கும் சமத்​து​வம் மற்​றும்சுதந்​திர​மாக வாழும் உரிமையை பாதிக்​கிறது. எனவே காவல்​துறை அதி​காரி​களுக்கு நிர்​வாக நடு​வருக்​கான அதி​காரங்​களை வழங்​கும் அரசாணையை செல்​லாது என அறி​வித்து ரத்து செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அந்த மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனு ஏற்​கெனவே விசா​ரணைக்கு வந்​த​போது, அரசாணைக்கு தடை விதித்து உத்​தர​விடப்​பட்​டது. நேற்று இந்த மனு மீண்​டும் நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது. மனுதொடர்​பாக உள்​துறை செய​லா​ளர் பதிலளிக்​க​வும், அரசாணைக்கு விதிக்​கப்​பட்ட தடையை நீட்​டித்​தும் உத்​தர​விட்டு விசா​ரணையை ஜூலை 14-ம் தேதிக்கு நீதிப​தி​கள் தள்​ளி​வைத்​து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT