செந்தில் பாலாஜி
சென்னை: கோவை தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் வெற்றியை எதிர்த்து ஈரோட்டை சேர்ந்த வாக்காளர் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தவெக வேட்பாளர் செந்தில்குமாரை விட 2,271 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 81-வது பிரிவு, ஒரு வாக்காளர் எந்த தொகுதி தேர்தலையும் எதிர்தது தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை.
எந்த தொகுதி தேர்தலை எதிர்த்து யார் வேண்டுமாலும் வழக்கு தொடர அனுமதித்தால், ஒவ்வொரு தேர்தலுக்கும் பிறகு ஏராளமான தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யும் நிலை உருவாகும்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சேர்ந்த மனுதாரர் பிரகாசம், கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளரும் அல்ல, வாக்காளரும் அல்ல எனக் கூறி, செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.