சென்னை: சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கே.சிவகுமாருக்கு எதிரான தேர்தல் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சேலம் வடக்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.சிவகுமார் 14,034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை எதிர்த்து, இரண்டாம் இடத்தைப் பிடித்த திமுக வேட்பாளர் ஆர்.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்தத் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தவெக எம்எல்ஏ கே.சிவகுமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.
அந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, “சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ கே.சிவகுமாரின் நிராகரிப்பு மனுவை ஏற்று, அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.