தமிழகம்

தனியார் கல்வி நிறுவனங்கள் சாதி விவரம் கேட்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சாதி விவரங்களைக் கேட்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகரைச் சேர்ந்த விக்ரமன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கல்வி, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது சாதி விவரங்களைக் கேட்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பின்போது சாதி தகவல்களைத் கேட்பதால் சேர்க்கை, வேலைவாய்ப்புத் தேர்வின்போது பாகுபாட்டுக்கு வழிவகை செய்யும்.

ஒருவரின் சாதி விவரங்களைக் கேட்பது சட்டவிரோதம். எனவே, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சாதி விவரங்களைக் கேட்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்து, ‘தமிழகத்தில் எந்தவொரு தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் சாதி விவரங்களை கேட்பதைக் கட்டாயமாக்கக் கூடாது’ என உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT