தமிழகம்

மத மாற்றத்தில் ஈடுபடும் அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: மத மாற்ற நடவடிக்​கை​களில் ஈடு​படும் அமைப்​பு​கள் வெளி​நாடு​களில் இருந்து நிதி பெற அனு​ம​திக்க கூடாது என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

கொடைக்​கானல் கன்​சீயன் பப்​ளிக் அறக்​கட்​டளை சார்​பில் எப்​சிஆர்ஏ சட்​டத்​தின் (வெளி​நாட்டு நிதி​யுதவி ஓழுங்​கு​முறை சட்​டம்) கீழ் வெளி​நாட்டு நிதி​யுதவி பெற சான்​றிதழ் கோரி விண்​ணப்​பிக்​கப்​பட்​டது. இந்த விண்​ணப்​பத்தை நிராகரித்து மத்​திய உள்​துறை துணை செய​லா​ளர் 19.1.2025-ல் உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இதனை நீதிப​தி​கள் ஜி.ஆர்​. சு​வாமி​நாதன், எம்​.டி.சுமதி ஆகியோர் விசா​ரித்​தனர். மனு​தா​ரர் சார்​பில், 'எங்​கள் அறக்​கட்​டளை சார்​பில் ஜென் தியான மையத்தை நடத்தி வரு​கிறோம். இது மதரீ​தி​யான அமைப்பு அல்ல. தியானம் சார்ந்த நடவடிக்​கைகளை மதரீ​தி​யான​தாகக் கருதக் கூடாது. எங்​களின் செயல்​பாடு​களை மதரீ​தி​யானவை என்று முத்​திரை குத்த முடி​யாது. எனவே வெளி​நாட்டு நிதி​யுதவி பெற அனு​மதி வழங்க வேண்​டும்' என வாதிடப்​பட்​டது.

மத்​திய அரசு சார்​பில், 'மனு​தா​ரர் அறக்​கட்​டளை மதரீ​தி​யான நிகழ்ச்​சிகளில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். மதமாற்​றம் மற்​றும் நாட்​டின் மதச்​சார்​பற்ற தன்​மைக்கு ஊறு விளைவிக்​கும் பிற நடவடிக்​கைகளுக்​குப் பயன்​படுத்​தப்​படக்​கூடிய வெளி​நாட்டு நிதி​யின் வரு​கை​யைக் கட்​டுப்​படுத்​து​வது மத்​திய அரசின் கொள்​கை. அந்த அடிப்​படை​யிலேயே மனு​தா​ரரின் கோரிக்கை நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே மனுவை தள்​ளு​படி செய்ய வேண்​டும்' எனக் கூறப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: ஜென் என்ற சொல் ஈர்ப்​புத்​தன்மை கொண்​டது. பல பிரபலங்​கள் ஜென் முறையை ஆதரித்​துள்​ளனர்.

உச்​சகட்ட ஞானத்​தை​யும் தெளிவை​யும் தேடும் யாராலும் ஜென் முறையைப் புறக்​கணிக்க முடி​யாது. இதனால் ஜென் பாதையைப் பின்​பற்​றும் ஒரு​வருக்கு ஏன் எப்​சிஆர்ஏ பதிவு மறுக்​கப்பட வேண்​டும் என சிந்​தித்​தோம். அப்​போது அறக்​கட்​டளையை உரு​வாக்​கிய​வரும், அறக்​கட்​டளை​யின் பின்​னணி​யில் முக்​கிய உந்​துசக்​தி​யாக இருப்​பவர் ஒரு கிறிஸ்தவ பாதிரி​யார் என மத்​திய அரசு வழக்​கறிஞர் தெரி​வித்​தார்.

கிறிஸ்​தவம் மீட்​பரை மைய​மாகக் கொண்ட மதம் என்​பதை யாரும் மறந்​து​விட முடி​யாது. அனை​வரை​யும் இயேசு கிறிஸ்​து​வின் மந்​தைக்​குள் கொண்​டு​வரு​வதே அவர்​களின் இறை​யியல் மற்​றும் மதரீ​தி​யான நோக்​க​மாகும்.

அனை​வரை​யும் உள்​ளடக்​கிய தன்​மை​யைக் கொண்ட இந்து மதத்​தைப் போலன்​றி, மற்ற மதங்​கள் இயல்​பாகவே மற்​றவர்​களை விலக்கி வைக்​கும் அல்​லது தனித்து நிற்​கும் தன்​மை​யைக் கொண்​ட​வை. யூதர்​கள், கிறிஸ்​தவர்​கள் மற்​றும் இஸ்​லாமியர்​கள் ஆகியோரில் தீவிரப் பற்​றுடைய​வர்​கள் தங்​கள் மதமே உண்​மை​யான மற்​றும் முழு​மை​யான இறைவெளிப்​பாடு என்று நம்​பு​கின்​றனர். அவர்​களின் புனித நூல்​களும் அவ்​வாறே கூறுகின்​றன.

இந்த அடிப்​படை​யில் மனு​தா​ரர் அறக்​கட்​டளை​யின் இணை​யதளத்​தைப் பார்​வை​யிட்​டோம். அங்​குள்ள தியான மையத்​தில் புத்​தர் சிலைக்கு மேலே சிலுவை போன்ற அமைப்பு இருப்​பதை பார்த்​தோம். மனு​தா​ரர் அறக்​கட்​டளைக்கு வெளி​நாட்டு நிதி​யுதவி சான்​றிதழ் வழங்க மறுத்து பிறப்​பித்த உத்​தர​வில் குறிப்​பிடப்​பட்​டுள்ள காரணம் முற்​றி​லும் ஏற்​புடையது. மனு​தா​ரர் அறக்​கட்​டளை விண்​ணப்​பத்​தில் அதன் தன்​மையை 'மதம் சார்ந்​தது' என்று சரி​யாகக் குறிப்​பி​டாத​தால் விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது.

அறக்​கட்​டளை போன்ற அமைப்​பு​கள் எப்​சிஆர்ஏ சட்​டத்​தில் பதிவு செய்​வதை உரிமை​யாகக் கோர முடி​யாது. வெளி​நாட்டு நன்​கொடைகளைப் பெறு​வது சட்​டப்​பூர்​வ​மான உரிமையோ அல்​லது முழு​மை​யான உரிமையோ இல்லை என உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே தெளிவுபடுத்​தி​யுள்​ளது. வெளி​நாட்டு நிதி​யுத​வி​யால் நாட்​டின் அரசி​யல் சூழல் பாதிக்​கப்பட வாய்ப்​புள்​ளது என்​றும் உச்ச நீதி​மன்​றம் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது.

பெரிய நாடு​கள் அல்​லது அவற்​றின் அமைப்​பு​கள் பிற நாடு​களின் பொது​வாழ்​வில் உள்​ளவர்​களுக்கு நேரடி​யாக வழங்​கும் நிதி​யுதவி கடந்த காலங்​களில் ஏற்​கெனவே இருந்த அரசாங்​கங்​களைக் கவிழ்த்து புதி​ய​வர்​களை ஆட்​சி​யில் அமர்த்​தி​யதைப் போல ஆபத்​தாக அமைய​லாம். இத்​தகைய சூழல்​களைக் கையாள்​வதற்​குத் தேவை​யான அதி​காரங்​களை எப்​சிஆர்ஏ சட்​டம் மத்​திய அரசுக்கு அளிக்​கிறது.

மனு​தா​ரர் அறக்​கட்​டளை மதரீ​தி​யான நிகழ்ச்​சிகளில் ஈடு​பட்​டிருந்​த​போ​தி​லும், தங்​களை மதச்​சார்​பற்​றவர்​களாகத் சித்​தரித்​துள்​ளனர். நாட்​டின் மதச்​சார்​பற்ற தன்மை மற்​றும் சமூக நல்​லிணக்​கத்​தைப் பாதிக்​காத செயல்​பாடு​களைக் கொண்ட மத அமைப்​பு​கள் எப்​சிஆர்ஏ சட்​டத்​தின் பதிவு​பெறத் தகு​தி​யுடைய​வை. அதே​நேரத்​தில் ஒரு மத நம்​பிக்​கையி​லிருந்து மற்​றொரு மத நம்​பிக்​கைக்கு மக்​களை மதம் மாற்​றும் நடவடிக்​கை​களில் ஈடு​படும் அமைப்​பு​களுக்கு எப்​சிஆர்ஏ பதிவு மறுக்​கப்பட வேண்​டும்.

இந்த காரணங்​களால் மனு​தா​ரர் அறக்​கட்​டளைக்கு சான்​றிதழ் வழங்க மறுத்து எப்​சிஆர்ஏ பிறப்​பித்த உத்​தரவு உறுதி செய்​யப்​படு​கிறது. மேல்​முறை​யீடு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​வில்​ கூறியுள்​ளனர்​.

SCROLL FOR NEXT