காஞ்சிபுரம் மேல்பெரமநல்லூரில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட உள்ள இடத்தில் தேக்கி வைக்கப்பட்டு மழையில் நனைந்த நெல்மூட்டைகள்.

 
தமிழகம்

நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படாததால் அவதி: மழையில் நனைந்து முளைக்கும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் திறக்​கப்​ப​டாத​தா​லும், கொள்​முதல் தாமதத்​தா​லும் அறு​வடை செய்​யப்​பட்ட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்​டைகள் மழை​யில் நனைந்து வீணாகி வரு​வ​தாக விவ​சா​யிகள் வேதனை தெரி​வித்​துள்​ளனர்.

காஞ்​சிபுரம் மாவட்​டம் சால​வாக்​கம் அருகே உள்ள மேல்​பெரமநல்​லூர் உள்​ளிட்ட தற்​காலிக அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் ஏற்​கெனவே செயல்​பட்ட இடத்​தில் சுமார் 10,000 நெல் மூட்​டைகள் அறு​வடை முடிந்து கொண்​டு​வந்து வைக்​கப்​பட்​டிருந்​தன.

கடந்த ஒரு மாத​மாக இந்த மூட்​டைகள் தேக்கி வைக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், அங்கு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் திறந்து கொள்​முதல் செய்​யப்​பட​வில்லை என்று கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் (செப். 3) பெய்த கனமழை​யால் திறந்​தவெளி​யில் வைக்​கப்​பட்​டிருந்த நெல் மூட்​டைகள் அனைத்​தும் நீரில் நனைந்து பெரும் சேதமடைந்​துள்​ளன.

இதே​போல் சால​வாக்​கம், கீழ்​பெரமநல்​லூர் ஆகிய கிராமங்​களி​லும் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் திறக்​கப்​பட​வில்​லை.

பெரும் நிதி இழப்பு இதனால் அறு​வடை செய்த நெல்லை விற்​பனை செய்ய முடி​யாமல் விவ​சா​யிகள் திறந்​தவெளி​யில் குவித்து வைத்​துள்​ளனர்.

திறந்​த வெளி​யில் கூரை வசதி​யின்றி வைக்​கப்​பட்​டிருந்த நெல் மணி​கள் தொடர்ந்து பெய்த மழை​யால் நனைந்​து, தற்​போது முளைக்​கத் தொடங்​கி​யுள்​ளன. இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக விவ​சா​யிகள் கவலை தெரிவிக்​கின்​றனர்.

இதுகுறித்து நுகர்​பொருள் வாணிபக் கழக அலு​வலர்​களிடம் கேட்​ட​போது, ``மாவட்​டம் முழு​வதும் விவ​சா​யிகளின் நலன் கருதி சுமார் 70 நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களைத் திறக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

இன்​னும் ஒரு வார காலத்​துக்​குள் அனைத்து மையங்​களும் பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​பட்​டு, நெல் கொள்​முதல்​ துரிதப்​படுத்தப்​படும்​'' எனத்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT