காரைக்குடி: தவெக ஆட்சி திரைப்படம் போன்று 100 நாட்கள் ஓடியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனக்கு எதிரான 2 வழக்குகளில் சிறைத் தண்டனை வழங்கியதை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன்மூலம் நீதி வென்றுள்ளது.
விஜய்யின் முழு பெயர் ஜோசப் விஜய் என்பதை முதன்முதலில் வெளியே சொன்னதே நான்தான். தவெக ஆட்சி திரைப்படம் போன்று 100 நாட்கள் ஓடி இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் சிதம்பரம் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் அவர் சொன்னது எதுவும் நடக்கவில்லை; பிரதமர் மோடி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார். எப்படியாவது மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயன்று வருகின்றனர்.
கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின் ஆகியோரை இந்தியாவிலேயே சிறந்த முதல்வர்கள் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே சொல்கிறார்.
அவர்கிட்ட சான்று வாங்குகிற அளவுக்கு கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின் நிலை ஆகிவிட்டது. கோயில்க ளுக்குள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்பதை வரவேற்கிறேன்.
கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு ஈடு இணையானவர் யாரும் இல்லை. ராகுல், விஜய் போன்றவர்கள் பிரதமர் போட்டியில் இருப்பதாக கூற அவசியமில்லை.
மோடி நினைக்கிற வரை அவர்தான் பிரதமர். அடுத்து அவர் யாரை கைகாட்டுகிறாரோ அவர்தான் பிரதமர். இவ்வாறு அவர் கூறினார்.