தமிழகம்

கூடலூரில் வனவிலங்கு தாக்கி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு: உறவினர்களுக்கு உடலை காட்டாததால் மறியல் போராட்டம்

ஆர்.டி.சிவசங்கர்

கூடலூர்: கூடலூர் அருகே வனவிலங்கு (புலி?) தாக்​கிய​தில் தோட்​டத் தொழிலாளி உயி​ரிழந்​தார். உடலை உறவினர்​களிடம் காட்​டா​மல் பிரேத பரிசோதனைக்கு அனுப்​பிய​தாக குற்​றம்​சாட்​டி,வனத்​துறை​யினர் மற்​றும் காவல்துறை​யினரை கண்​டித்து உறவினர்​கள் மறியலில் ஈடு​பட்​டனர்.

நீல​கிரி மாவட்​டம் கூடலூர் பகுதி அடர்ந்த வனப்​பகு​தி​களை ஒட்​டி​யுள்​ள​தால் வனவிலங்​கு​கள்அடிக்​கடி குடி​யிருப்பு பகு​தி​களுக்​குள் நுழை​யும் சம்​பவங்​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் மனித உயி​ரிழப்​பு​அவ்​வப்போது நிகழ்கிறது.

இந்​நிலை​யில், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூ​ராட்சி 4-ம் கேட் பகு​தி​யைச் சேர்ந்த தோட்​டத் தொழிலாளி பாலு (எ) பால​கிருஷ்ணன் (58), நேற்று முன்​தினம் வெளியே சென்றவர் வீடு திரும்​ப​வில்​லை.

உறவினர்​கள் நேற்று வனத் துறைக்கு தகவல் தெரி​வித்து தேடு​ம் பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது, வனவிலங்கு தாக்கி உயி​ரிழந்த நிலை​யில் பால​கிருஷ்ணன் உடல் கண்​டெடுக்​கப்​பட்​ட​தாக தகவல் வெளி​யானது. இதையடுத்து சம்பவ இடத்​துக்​குச் சென்ற வனத் துறை​யினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பினர். ஆனால், உடலை உறவினர்​களிடம் காட்​டா​மல் அனுப்​பிய​தாகக் கூறி, பால​கிருஷ்ணனின் உறவினர்​கள் வனத் துறை​யினர் மற்​றும் காவல்​துறை​யினருடன் கடும் வாக்​குவாதத்​தில் ஈடு​பட்​டனர். இதனால் அப்​பகு​தி​யில் சூழல் நில​வியது.

மேலும், கூடலூர் பகு​தி​யில் தொடர்ந்து வன விலங்​கு​கள் தாக்​குதலால் மனித உயி​ரிழப்​பு​கள் நடை​பெற்று வரு​வதைக் கண்​டித்​து, மனித-வன​விலங்கு மோதல்​களைத் தடுக்க வனத்​துறை போதிய நடவடிக்கை எடுக்​க​வில்லை என குற்​றம்​சாட்டி பொது​மக்​கள் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். வனத்​துறை மற்​றும் காவல்​துறை அதி​காரி​கள் சமரசம் செய்ததால் போ​ராட்​டம் கைவிடப்பட்டது.

கண்காணிப்பு: இதனிடையே சம்​பவம் நடந்த பகு​தி​யில் கூடு​தலாக வனப்பணி​யாளர்​கள், கண்​காணிப்பு கேம​ராக்​கள், டிரோன்மூல​ம் கண்​காணிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT