அச்சிறுப்பாக்கம் அடுத்த ஒரத்தி கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர்.

 
தமிழகம்

மதுராந்தகம் தொகுதியில் வெற்றிக்காக மல்லுகட்டும் வேட்பாளர்கள்

கோ.கார்த்திக்

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக, அதிமுக, நாதக, தவெக மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் அமுலு பொன்மலர், அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ மரகதம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எழில் கேத்ரின் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

திமுக - குடிநீர், கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு

திமுக வேட்பாளர் அமுலுபொன்மலர், ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்கும் இல்லத்தரசி திட்டம் உள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கைகளை எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

          

மேலும், கிராமப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும், பாசன கால்வாய்கள் தூர்வாரப்படும், நகரில் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்து வாக்கு சேகரிக்கிறார்.

மதுராந்தகம் அடுத்த கழனிப்பாக்கம் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் மரகதம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக - பாலாற்றின் குறுக்கே உயர் மேம்பாலம்

இத்தொகுதியில் ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள அதிமுக வேட்பாளர் மரகதம், அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம், நகரப் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை, ஈசூர்-வல்லிபுரம் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் என வாக்குறுதியளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாதக - பாசன கால்வாய்கள் தூர்வாரப்படும்

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜானகிராமன், மதுராந்தகம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும், கிராமப்பகுதிகளில் உள்ள ஏரியிலிருந்து விளைநிலங்களுக்கு செல்லும் பாசன கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கப்படும்.

அச்சிறுப்பாக்கம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜானகிராமன்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேவையான இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்கிறார்.

தவெக - அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க உறுதி

தவெக வேட்பாளர் எழில் கேத்ரின், பெண்களுக்கான அரசாக தவெக ஆட்சி அமையும். மதுராந்தகம் நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

செய்யூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் எழில் கேத்ரின்.

கிராமப்புற பேருந்து சேவைகள் அதிகரிக்கப்படும். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

SCROLL FOR NEXT