தமிழகம்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் கோலோச்சுவது யார்?

கோ.வெங்கடேசன்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர், உருவாக்கப்பட்ட தொகுதி கீழ்பென்னாத்தூர். கலசப்பாக்கம், திருவண்ணாமலை சட்டப்பேரவை தொகுதியில் இருந்த குறிப்பிட்ட பகுதிகள் பிரித்து உருவாக்கப்பட்டது.

தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு கீழ் பென்னாத்தூர் சட்டப்பேரவை தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு முதல் தேர்தலை சந் தித்தது. கீழ்பென்னாத்தூர் ஊராட்சஒன்றியத்தில் 45 கிராம ஊராட்சிகளும், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 47 கிராம ஊராட்சிகளையும் மற்றும் திரு வண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 122 கிராம ஊராட்சிகளையும், கீழ்பென்னாத்தூர் மற்றும் வேட்டவலம் ஆகிய 2 பேரூ ராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளன.

அதிக அளவில் கிராமங்களை உள்ளடக்கிய இந்த தொகுதியில், மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே அடிப்படையாக உள்ளது. கரும்பு, நெல், பூக்கள், வேர்க்கடலை மற்றும் தோட்ட பயிர் கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தொகுதியில் வன்னியர்களும், பட்டிய லினத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.

ஆவூர் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 2011-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

பின்னர், 2016 மற்றும் 2021 நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி வெற்றி பெற்றுள்ளார். தற்போது, நடைபெற உள்ள தேர்தலில் திமுக சார்பில் தொடர்ந்து 3-வது முறையாக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் முன் னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவர், கடந்த 2001-ம் ஆண்டு கலசப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று பால்வள துறை அமைச் சரானார். பின்னர் 2006-ம் ஆண்டு தண்டராம்பட்டு தொகுதியிலும், 2011-ம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதியிலும் எ.வ.வேலுவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

பின்னர், அரசி யலில் இருந்து சற்று விலகி இருந்தவர் மீண்டும் அரசியலில் அடுத்தகட்ட நகர்வை தொடங்கியுள்ளதுடன், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். தவெக சார்பில் ராஜா, நாம் தமிழர் கட்சி சார்பில் லோகநாதன் மற்றும் சுயேட்சை உட்பட மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி, திமுக அரசின் சாதனைகள், தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை தெரிவித்தும், தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்தும் வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் எஸ்.ராமச்சந்திரன், திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கூறியும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து வாக்கு சேகரித்து வரு கிறார். மற்ற வேட்பாளர்கள் தங் களது வழக்கமான பிரச்சாரங்களை மேற் கொண்டு வருகின்றனர்.

நீண்ட நாள் கோரிக்கைகள்

* விவசாயிகள் நிறைந்த இந்த தொகுதி யில் காய்கறிகள் பதப்படுத்தப்படும் குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும்.

* கிராமங்களை உள்ளடக்கியுள்ள தொகுதி என்பதால் அரசு கலைக்கல்லூரி அல்லது அரசு தொழில்நுட்ப கல் லூரியை தொடங்க வேண்டும்.

*சிறு, குறு தொழிற்சாலையை அமைத்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

* ஆவூர் கிராமத்தில் பாய் உற்பத்தி தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் அல்லது மின் கட்டண சலுகை அளிக்க வேண்டும்.

* நந்தன் கால்வாய் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

* திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில் பாதை அமைக்க வேண்டும்.

* வேட்டவலம் பேரூராட்சியில் புறவழி சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

* கிராமங்களுக்கான சாலை வசதிகளை சீரமைக்க வேண்டும்.

* கீழ்பென்னாத்தூரில் இருந்து பூத மங்கலம் கிராமத்துக்கும், வேட்டவலத் துக்கும் பேருந்து சேவைகளை கொண்டு வர வேண்டும்.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,18,702

  • பெண் - 1,22,106

  • மூன்றாம் பாலினத்தவர் - 15

  • மொத்த வாக்காளர்கள் - 2,40,823

SCROLL FOR NEXT