சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் மாளிகை வாயிலில் வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி.

 
தமிழகம்

சென்னையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: மதுரை, புதுச்சேரி நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை / மதுரை / புதுச்சேரி: சென்​னைக்கு நேற்று இரவு வந்த பிரதமர் மோடிக்கு விமானநிலை​யத்​தில் உற்​சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது.

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடியை, விமான நிலை​யத்​தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்​ளிட்​டோர் வரவேற்​றனர்.

          

பின்​னர், கிண்டி ஆளுநர் மாளிகை சென்ற பிரதமரை, ஆளுநர் ஆர்​.என்​.ரவி வரவேற்​றார். இரவு ஆளுநர் மாளி​கை​யிலேயே பிரதமர் தங்கி ஓய்​வெடுத்​தார். மேலும், விமான நிலை​யம் முதல் ஆளுநர் மாளிகை வரையி​லான சாலை​யில் உச்​சகட்ட பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. இன்று காலை 10.20 மணிக்கு ஆளுநர் மாளி​கை​யில் இருந்து புறப்​பட்டு விமான நிலை​யம் செல்​லும் பிரதமர் மோடி, அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் புதுச்​சேரி செல்​கிறார்

இன்று காலை 11.30 மணிக்கு புதுச்​சேரி​யில் லாஸ்​பேட்டை ஹெலிபேடு மைதானத் திடலில் நடை​பெறும் அரசு நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். அவரை, துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன், முதல்​வர் ரங்​க​சாமி உள்​ளிட்​டோர் வரவேற்​கின்​றனர்.

ஸ்ரீஅர​விந்​தரின் 150-வது பிறந்த ஆண்டை நினைவு கூரும் வகை​யில், புதுச்​சேரி ஆரோ​வில்​லில் நடை​பெறும் உலகளா​விய ஆன்​மிக மகோத்சவத்தை விழா மேடை​யில் இருந்​த​படி காணொலி வாயி​லாகத் தொடங்கி வைக்​கிறார். இந்த மகோத்​சவத்​தில், ஆன்​மிகத் தலை​வர்​கள், சிந்​தனை​யாளர்​கள் மற்​றும் பல்​வேறு நாடு​களைச் சேர்ந்த 100 புகழ்​பெற்ற பேச்​சாளர்​கள், 400-க்​கும் மேற்​பட்ட பங்​கேற்​பாளர்​கள் பங்​கேற்​கின்​றனர்.

இந்​நிலை​யில், விழா நடை​பெறும் பகு​தி​யில் டிஜிபி ஷாலினி சிங் நேற்று ஆய்வு மேற்​கொண்டார். விழா நடக்​கும் ஹெலிபேடு மைதானம் பிரதமரின் சிறப்​புப் பாது​காப்பு படை​யின் கட்​டுப்​பாட்​டில் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. புதுச்​சேரி நகரின் பகு​தி​யின் முக்​கிய இடங்​களில் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்டுள்ளது.

புதுச்​சேரி நிகழ்ச்​சிக்​குப் பின்​னர் பிற்​பகல் 2.45 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வரும் பிரதமர், மதுரை விமான நிலைய வளாகத்​தில் நடைபெறும் அரசு விழா​வில் பங்​கேற்​கிறார். பின்​னர், திருப்​பரங்​குன்​றம் முரு​கன் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​கிறார்.

தொடர்ந்​து, மாலை 4.30 மணி​யள​வில் மதுரை மண்​டேலா நகர் பகு​தி​யில் நடை​பெறும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கிறார். இதற்​காக 150 ஏக்​கர் பரப்​பில் பொதுக்​கூட்ட அரங்கு அமைக்​கப்​பட்டுள்ளது. கோட்டை போன்ற நுழை​வா​யில்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. பிரதமர் வரு​கையை முன்​னிட்​டு,சென்னை, புதுச்சேரி, மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT