சென்னை: உயர்கல்வித் துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு கலை அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் ஷிப்ட்-1 மற்றும் ஷிப்ட்-2-ல் பணிபுரியும் 8,741 கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை ரூ.30 ஆயிரத்தில் இரு்ந்து ரூ.35
ஆயிரமாக நவ.1 முதல் உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது. அதேபோல், அரசு பொறியியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 319 கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.36 ஆயிரமாகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 566 கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும் நவ.1 முதல் உயர்த்தி வழங்க அரசு ஆணையிடுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் உறுதி அளித்தபடி தொகுப்பூதிய உயர்வை செப்.1 முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.