தமிழகம்

எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.828 கோடி விடுவித்து அரசாணை

செய்திப்பிரிவு

சென்னை: எம்எல்ஏக்கள் தொகுதி மேம்​பாட்டு நிதிக்காக 2026-27 நிதி​யாண்​டுக்​காக ரூ.828 கோடி நிதி ஒப்​புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது.

கடந்த ஆண்​டு​களில் ஒவ்​வொரு தொகு​திக்​கும் சட்​டப்​பேரவை தொகுதி மேம்​பாட்டு நிதி​யாக ரூ.3 கோடி வீதம் மொத்​தம் ரூ.702 கோடி நிதி​ ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு வந்​தது.

இந்​நிலை​யில், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களால் செயல்​படுத்​தப்​படும் திட்​டப்​பணி​களுக்​கான 18 சதவீத ஜிஎஸ்டி செல​வை​யும் மாநில அரசே ஏற்​றுக்​கொண்​டு, அதற்​கான நிதி​யை​யும் கூடு​தலாக ஒதுக்​கீடு செய்ய ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்சி ஆணை​யர் அரசிடம் பரிந்​துரைத்​தார்.

அவரது கருத்​துருவை பரிசீலனை செய்து ஊரக வளர்ச்​சித் துறை செயலர் பிர​சாந்த் மு.வடநெரே வெளி​யிட்ட அரசாணை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டப்​பேரவை உறுப்​பினர் தொகுதி மேம்​பாட்​டுக்​கான மொத்த ஒதுக்​கீடு ரூ.3.54 கோடி​யாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இதற்​காக மாநிலத்​தின் அனைத்து தொகு​தி​களுக்​கும் சேர்த்து 2026-27-ம் ஆண்​டுக்கு மொத்​தம் ரூ.828.36 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, அதனை விடுவிக்க அதற்​கான நிர்​வாக அனு​ம​தி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இத்​திட்​டத்​தின் கீழ் ஒதுக்​கப்​படும் நிதியை தற்​போதைய சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களால் மேற்​கொள்​ளப்​படும் புதிய பணி​களுக்கு மட்​டுமே பயன்​படுத்த வேண்​டும்.

முந்​தைய காலத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட பணி​களுக்கு நிதியை செல​விடக் கூடாது. ஒப்​புதல் அளிக்​கப்​பட்ட தொகையை பெற்று சம்​பந்​தப்​பட்ட மாவட்ட ஆட்​சி​யர்​களுக்​கும், சென்னை மாநக​ராட்சி ஆணை​யருக்​கும் விடுவிக்க ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்சி ஆணை​யருக்கு அதி​காரம் அளித்து ஆணை​யிடப்​படு​கிறது. இவ்​வாறு ​கூறப்​பட்​டுள்ளது.

SCROLL FOR NEXT