நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் வெங்கடரமணன், ராஜ்மோகன், வன்னி அரசு ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அ.அருண் தம்புராஜ், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்டோர்.

 
தமிழகம்

99-வது பிறந்தநாள் விழா: நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு அரசு மரியாதை

முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘நடிகர் தில​கம்’ என போற்​றப்​ படும் சிவாஜி கணேசனின் 99-ம் ஆண்டு பிறந்த நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது.

இதை​யொட்டி அடை​யாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்​டபத்​தில் தமிழக அரசு சார்​பில் சிவாஜி​யின் சிலைக்கு மாலை அணிவிக்​கப்​பட்​டு, அதன் அருகே அவரது படம் மலர்களால் அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்​தது.

அரசு சார்​பில் சட்​டப்​பேரவை தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர், அமைச்​சர்​கள் ஏ.ராஜ்மோகன், வெங்​கடரமணன், வன்னி அரசு ஆகி​யோர் சிவாஜி​யின் படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினர்.

இந்​நிகழ்ச்​சி​யில் தமிழ் வளர்ச்சி மற்​றும் செய்​தித்​துறை செயலர் வே.​ராஜா​ரா​மன், செய்தி மக்​கள் தொடர்​புத்​துறை இயக்​குநர் டாக்​டர் ஏ.அருண் தம்​பு​ராஜ், சிவாஜி​யின் மகன்​கள் ராம்​கு​மார், பிரபு மற்​றும் குடும்​பத்​தினர், திரைப்பட கலைஞர்​கள், அரசு அலு​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

காங்​கிரஸ் கட்சி சார்​பில் தமிழ்​நாடு காங்​கிரஸ் கமிட்டி தலை​வர் மாணிக்​கம் தாகூர், அக்​கட்​சி​யைச் சேர்ந்த உயர்​கல்​வித்​துறை அமைச்​சர் பி.​விஸ்​வ​நாதன் ஆகி​யோர் சிவாஜி​யின் சிலைக்கு மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர்.

இந்​நிகழ்ச்​சி​யில் தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்​கிரஸ் கமிட்டி தலை​வர் டி. விஜயசேகர், தமிழ்​நாடு காங்​கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவு தலை​வர்டி.ஏ. நவீன் மற்​றும் காங்​கிரஸ் நிர்​வாகி​கள் கலந்​து​கொண்​டனர்.

முதல்​வர் விஜய் புகழாரம்

சமூகவலை​தளத்​தில் முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்டபதி​வில், ‘‘தனது நிகரற்ற நடிப்​பாற்​றலாலும், கம்​பீரக் குரலாலும், ஏற்​றுக்​கொண்ட கதா​பாத்​திரங்​களுக்கு உயிரூட்​டி, திரை​யுல​கின் இமய​மாய் திகழ்ந்​து, உலகத் தமி​ழர்​களின் உள்​ளங்​களில் நீங்கா இடம்​பிடித்த நடிகர் தில​கம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்​த​நாளில் அவரது மகத்​தானகலைப்​பணியை நினை​வு​கூர்ந்து போற்றி வணங்​கு​கிறேன்.

வரலாற்று நாயகர்​கள், புராண மாந்​தர்​கள், சமூகத்​தின் எளிய மனிதர்​கள் என அனைத்து கதா​பாத்​திரங்​களை​யும் தன் அசாத்​திய நடிப்​பால் நம் கண்​முன்னே நிறுத்​தி, தமி​ழின் செழு​மை​யை​யும் பெரு​மை​யை​யும் திரைப்​படங்​களின் வழியே உலகறியச் செய்து நடிப்​புக்கு இலக்​கண​மாய் திகழ்ந்​தவர்.

சிவாஜி கணேசனின் கலை​யுல​கச் சாதனை​கள் தலை​முறை​களைக் கடந்​தும் தமிழ் மண்​ணின் பெரு​மை​யாக என்​றும் நிலைத்​திருக்​கும்’’ என்று கூறி​யுள்​ளார்.

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட பதி​வில், ‘‘சிம்​மக் குரலாலும் செழுந்​தமிழ் உச்​சரிப்​பாலும் கம்​பீர நடை​யாலும் திரை​யுலகை ஆண்ட நடிகர் தில​கம் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்​த​நாள்! இந்​நாளில், நடிகர் தில​கத்​துடன் பழகிய அழகிய தருணங்​களை​யும், ஈடு இணை​யற்ற அவரது நடிப்​பாற்​றலை​யும் நினை​வு​கூர்ந்து போற்​றுகிறேன்’’ என குறிப்​பிட்​டுள்​ளார்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், ‘‘வீரம், பாசம், கோபம், சோகம், காதல், தியாகம், கம்​பீரம் என எந்​தவொரு காட்​சி​யாக இருந்​தா​லும், தனது உடல்​மொழி​யாலும் உணர்ச்​சிமிகுந்த உச்​சரிப்​பாலும் நடிப்​புக்கே புதிய இலக்​கணம் வகுத்த நடிப்​புச் சக்​கர​வர்த்​தி​யின் கலைத்​திற​னைச் சிறப்​பிக்​கும் வகை​யில், நாட்​டின் உயரிய விரு​தான பாரத ரத்​னா விருதை வழங்​கி கவுரவிக்​க வேண்​டும்​ என மத்​தி​ய அரசை வலியுறுத்துகிறேன்​’’ என்று தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT