தமிழகம்

751 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும்: அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: ‘​மார்ச் இறு​திக்​குள் பணி​யில் இணைந்​தால் மட்​டுமே 2 ஆண்​டு​கள் முடி​வில் நீட் தேர்​வில் பங்​கேற்க முடி​யும் என்​ப​தால், தேர்​தல் ஆணை​யத்​தின் சிறப்பு அனு​மதி பெற்று 751 மருத்​து​வர்​களுக்கு பணி நியமன ஆணை​களை வழங்க வேண்​டும்’ என்று அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

அரசு மருத்​து​வ​மனை​களுக்கு 1,100 உதவி மருத்​து​வர்​களை தேர்ந்​தெடுப்​ப​தற்கு கடந்த ஜன.25-ம் தேதி நடந்த தேர்​வில் தேர்ச்சி பெற்ற 20 ஆயிரம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேரின் சான்​றிதழ்​கள் சரி​பார்க்​கப்​பட்​டு, 1,071 பேர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர்.

          

அவர்​களில் 100 பேருக்கு பணி நியமன ஆணை​களை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கடந்த 13-ம் தேதி வழங்​கி​னார். அடுத்த நாள் 220 பேருக்கு பணி நியமன ஆணை​கள் வழங்​கப்​பட்​டது. காலிப்​பணியிடங்​கள் இல்​லாத​தால் மீதமுள்ள 751 பேருக்கு பணி நியமன ஆணை​கள் வழங்​கப்​பட​வில்​லை.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு மருத்​துவ அலு​வலர்​கள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் மு.அகிலன் கூறிய​தாவது: சுகா​தா​ரத்​துறை​யில் மருத்​து​வர் காலிப்​பணி​யிடங்​கள் இல்​லாத​தால், 3 மாதம் கழித்து தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மருத்​து​வர்​களுக்கு பணிநியமன ஆணை​கள் வழங்​கப்​படும் என்று உறு​தி​யளிக்​கப்​பட்​டுள்​ளது.

நீட் தேர்வுக்கு...

அரசு இட ஒதுக்​கீட்​டில் மருத்​துவ மேற்​படிப்​புக்​கான நீட் தேர்வு எழுத 2 ஆண்​டு​கள் பணிபுரிய வேண்​டும்.

மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு பணி​யில் இணைந்​தால் மட்​டுமே, கால​விரயமின்றி 2 ஆண்​டு​கள் முடி​வில் நீட் தேர்​வில் கலந்து கொள்ள முடி​யும்,எனவே, தேர்வு செய்​யப்​பட்டு காத்​திருக்​கும் மருத்​து​வர்​களின் எதிர்​காலம் கரு​தி, அரசு சேவை சாரா மருத்​து​வர்​களை பிணைக்​காலப் பணி​யில் இருந்து விடு​வித்​து, அந்த பணி​யிடங்​களில் அரசு பணிக்​காக காத்​திருக்​கும் மருத்​து​வர்​களுக்​கு, தேர்​தல் ஆணை​யத்​திடம் சிறப்பு அனு​மதி பெற்று பணி நியமன ஆணை​களை வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT