தமிழகம்

‘வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை மருத்துவ சமுதாயம் மன்னிக்காது’

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் வேதனை

செய்திப்பிரிவு

சென்னை: ​​அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளியிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘தி​முக ஆட்சி அமைந்​ததும் அரசு மருத்​து​வர்​களின் கோரிக்கை நிறைவேற்​றப்​படும்’ என்று கடந்த 2019-ல் மருத்​து​வர்​கள் போராட்​டத்​தின்​போது, எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த ஸ்டா​லின் நேரில் வாக்குறுதி அளித்​தார்.

ஆனால், சொன்​னதை செய்​ய​வில்​லை. இத்​தனைக்​கும் ஸ்டா​லின் முதல்​வராகப்பதவி​யேற்​ற​போது, கரோனா தொற்​றின் உச்​சத்​தால் அசா​தாரண சூழ்​நிலை நில​வியது. அந்த கடின​மான தருணத்​தில் உறு​துணை​யாக இருந்த அரசு மருத்​து​வர்​களை அவரால் நிச்​ச​யம் மறக்க முடி​யாது.

          

முன்​னாள் முதல்​வர் கருணாநிதி வழி​யில் நடக்​கும் ஆட்சி என பெரு​மை​யாக சொல்​லிக் கொள்​கின்​றனர். ஆனால், அவர் கொண்​டு​வந்த அரசாணை 354-ஐ அமல்​படுத்​த​வில்​லை. அரசு மருத்​து​வர்​களின் ஊதி​யக் கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும் என்று சென்னை உயர்நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் நீதி கிடைக்​க​வில்​லை.

எய்ம்​ஸுக்கு இணை​யாக அரசு மருத்​து​வர்​களுக்கு ஊதி​யம் தர வேண்​டும் என்று தேசிய மருத்​துவ ஆணை​யம் அறி​வுறுத்​தி​யும் செயல்​படுத்​த​வில்​லை. மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களை அதி​கரிக்​க​வில்​லை.

‘அரசு மருத்​து​வர்​களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்​றப்​படும். கரோனா காலத்​தில் பணி​யின்​போது உயி​ரிழந்த அரசு மருத்​து​வர் விவே​கானந்​தனின் மனை​விக்கு அரசுப் பணி வழங்​கப்​படும்’ என்று சட்​டப்​பேர​வை​யின் கடைசி கூட்​டத்​தொடரிலா​வது முதல்​வர் அறி​விப்​பார் என்று நம்​பினோம். ஆனால், ஏமாற்​றமே மிஞ்​சி​யது.

மருத்​து​வர்​களின் சேவையை அங்​கீகரிக்க மறுக்​கும் ஒரே மாநில​மாக தமிழகம் உள்​ளது. உயிர்​காக்​கும் துறை​யின் இதய​மாக உள்ள அரசு மருத்​து​வர்​களுக்கு அளித்த வாக்குறுதியை ஆட்​சிக் காலம் முழு​வதுமே நிறைவேற்​றாமல் இருப்​பதை மருத்​துவ சமு​தா​யம் ஒரு​போதும் மன்​னிக்​காது என்​பதை வேதனை​யுடன் கூறுகிறோம்​ என்று அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT