சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலையில் பாரதி பறை பண்பாட்டு மையத்தை திறந்துவைத்து, உற்சாகத்துடன் பறை இசைத்த ஆளுநர் ஆர்.என். ரவி.

 
தமிழகம்

பள்ளிகளில் பறை இசை பாடம் கற்றுத்தர வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

விருதுநகர்: பள்ளிகளில் பறை இசை பாடத்​தைக் கற்​றுத்தர வேண்​டும் என தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​யுள்​ளார். விருதுநகர் மாவட்​டம் சாத்​தூர் அரு​கே​யுள்ள மேட்​ட மலை​யில், தமிழக ஆளுநர் ஆளுநரின் விருப்ப நிதி ரூ.50 லட்​சம் மதிப்​பில், பத்ம விருது பெற்ற பறை இசைக் கலைஞர் வேலு ஆசான் மூலம் கட்​டப்​பட்​டுள்ள ‘பாரதி பறை பண்​பாட்டு மையம்’ திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. ஆளுநர் ஆர்​.என்.

ரவி பண்​பாட்டு மையத்தை திறந்து வைத்​தார். முன்​ன​தாக, விருதுநகர் ஆட்​சி​யர் சுகபுத்​ரா, ஆளுநரை வரவேற்​றார். கலை​ மாமணி விருதுபெற்ற நாகஸ்வர கலைஞர் அய்​யாவு பூரண கும்​ப மரியாதை அளித்​தார்.

விழா​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி பேசி​ய​தாவது: சங்க இலக்​கி​யங்​களில் ஈரா​யிரம் ஆண்​டு​களுக்கு முன்பு நமது பாரம்​பரிய இசை போற்​றப்​பட்​டுள்​ளது.

பறை இசை அதன் சிறப்​புக் குறை​யாமல் இளைஞர்​களிடம் கொண்டு சேர்க்​கப்பட வேண்​டும். இளைஞர்​கள் மற்​றும் இளம் தலை​முறை​யினருக்கு பறை இசை கற்​றுக் கொடுத்​து, மேலும் இதை வளர்க்க வேண்​டும். பறை இசையை ஆளுநர் மாளி​கை​யில் அரங்​கேற்​றம் செய்ய நான் அழைப்பு விடுக்​கிறேன்.

முன்​பெல்​லாம் அதி​காரம் படைத்​தவர்​களுக்​கும், அவர்​களு​டன் இருந்​தவர்​களுக்கும் மட்​டுமே தேசிய விருதுகள் வழங்​கப்​பட்​டன. ஆனால், தற்​போது அந்த நிலை இல்​லை. சமு​தா​யத்​தின் அடித்​தட்​டில் வாழும் சாதனை மனிதர்​களுக்​கும் தேசிய விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன.

அதற்கு வேலு ஆசான் ஓர் உதா​ரணம். பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் பறை இசை பற்​றிய பாடத்தை கொண்​டு​வந்​து, மாணவர்​களுக்கு கற்​றுத்தர வேண்​டும். பறை இசை குறித்து முனை​வர் பட்ட ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்பட வேண்​டும். 2047-ல் இந்​தியா வளர்ந்த நாடாக இருக்​கும். நாடு சுதந்​திரம் அடைந்த நூறாவது ஆண்​டைக் கொண்​டாடும்.

அப்​போது தமிழகம் மட்​டுமின்றி நாடு முழு​வதும், உலகம் முழு​வதும் பறை ஓசை கேட்க வேண்​டும். இதை மக்​கள் இயக்​க​மாக கொண்டு செல்ல வேண்​டும். இவ்​வாறு ஆளுநர்​ ஆர்​.என்​.ர​வி பேசி​னார்​.

SCROLL FOR NEXT