தமிழகம்

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவார் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: மகாராஷ்டிரா மாநில துணை முதல்​வர் அஜித்​ப​வாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர், முதல்​வர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளியிட்ட இரங்கல் அறிக்கை வருமாறு:

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: விபத்​தில் அஜித்பவார் உயி​ரிழந்த செய்​தி​ கேட்டு அதிர்ச்​சி​யும், வேதனை​யும் அடைந்​தேன். அவரது மறைவு ஈடு​ செய்ய முடி​யாத இழப்​பை​யும், நிரப்ப முடி​யாத வெற்​றிடத்​தையும் ஏற்​படுத்​தி​யுள்​ளது.

          

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: மகாராஷ்டிரா மாநில துணை முதல்​வர் அஜித்பவார் விமான விபத்​தில் உயி​ரிழந்த செய்தி அறிந்து மிக​வும் வேதனையடைந்​தேன். மிகப்​பெரும் துன்ப நிகழ்​வான இதனை ஏற்​றுக்​ கொள்ள நெஞ்​சம் மறுக்​கிறது.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: அஜித்​ப​வாரின் மறைவு, மகாராஷ்டிரா மாநில அரசி​யலுக்​கும், பொது​வாழ்​வுக்​கும் ஈடு​செய்ய முடி​யாத பெரும் இழப்​பாகும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: அஜித்​ப​வாரின் உயி​ரிழப்பு செய்தி அதிர்ச்சியளிக்​கிறது.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: அஜித்ப​வாரின் அரசி​யல் பயணம் அர்ப்​பணிப்​பு, பொதுச்​சேவை, சிறந்த நிர்​வாகத்​திறன், மக்​கள் நலன் ஆகிய​வற்​றால் அடை​யாளப்​படுத்​தப்​பட்​டது.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​ செல்​வம்: அஜித்​ப​வாரின் மறைவு செய்​தி​யறிந்து மிகுந்த மனவேதனை அடைந்​தேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாமக தலைவர் அன்புமணி, மநீம தலைவர் கமல்ஹாசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT