கோப்புப் படம்

 
தமிழகம்

பல்கலை., அரசு கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப போர்க்கால நடவடிக்கை: ஆளுநர் உரையில் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் அரசு கல்​லூரி​களில் காலி​யாக உள்ள உதவி பேராசிரியர் பணி​யிடங்​களை நிரப்ப போர்க்​கால நடவடிக்கை எடுக்​கப்​படும் என ஆளுநர் உரை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, ஆளுநர் உரை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: அரசி​யலமைப்புச் சட்​டத்​தின் கீழ் கல்​வி, பொதுப்​பட்​டியலில் இருப்​ப​தன் காரண​மாக, நீட் தேர்​வு, தேசி​யக்​கல்விக்​கொள்கை திணிப்​பு, மும்​மொழிக்​கொள்கை போன்ற பிரச்​சினை​கள் ஏற்​படு​கின்​றன.

எனவே, கல்​வியை பொதுப்​பட்​டியலில் இருந்து மாநில பட்​டியலுக்கு மாற்ற தேவை​யான அனைத்து முயற்​சிகளை​யும் அரசு மேற்​கொள்​ளும்.

உண்​மை​யான கல்வி சீர்​திருத்​தம் என்​பது கல்வி நிறு​வனங்​களின் தரத்​தை​யும், அதன் கற்​பித்​தல் திறனை​யும் உயர்த்​து​வ​தில்​தான் அடங்​கி​யுள்​ளது.

அதற்​கேற்ப மாநிலத்​தின் பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் உயர்​கல்வி நிறு​வனங்​களில் நீண்ட கால​மாக நிரப்​பப்​ப​டா​மல் உள்ள தேவை​யான உதவி பேராசிரியர் மற்​றும் ஆசிரியர் காலிப்​பணி​யிடங்களை தகுதி மற்​றும் திறமை​யின் அடிப்​படை​யில் நிரப்​புவதற்கு போர்க்​கால அடிப்​படை​யில் அரசு நடவடிக்கை எடுக்​கும்.

அது​மட்​டுமின்​றி, உயர்​கல்​வித்​துறை​யில் பல்​வேறு அடிப்​படை சீர்​திருத்​தங்​களை அரசு கொண்​டுவர உள்​ளது. இதன்​மூலம் தமிழக மாணவர்​களுக்கு உலகத்​தரம் வாய்ந்த உயர்​கல்வி கிடைக்​கும்.

அரசின் நலத்​திட்​டங்​களை மக்​களிடம் எடுத்​துச் செல்​வ​தில் முக்​கிய பங்கு வகிப்​பவர்​கள் அரசு ஊழியர்​கள். அதே​போல், இளைய சமு​தா​யத்தை நல்​வழிப்​படுத்​து​வ​தில் முக்​கிய பங்கு வகிப்​போர் ஆசிரியர்​கள்.

எனவே, ஆசிரியர்​கள், அரசு ஊழியர்​கள் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​களின் நலன்​கள் தொடர்ந்து பாது​காக்​கப்​படும். அவர்​களுக்​கான மருத்​துவ காப்​பீட்​டுத் திட்​டங்​கள் மேலும் செம்​மைப்​படுத்​தப்​படும்.

இலங்கைக் கடற்​படை அதி​காரி​களால் கைது செய்​யப்​படு​வதும், அவர்​களின் மீன்​பிடி படகு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டு, நீண்​ட​காலம் பிடித்து வைக்​கப்​படு​வதும், கணிச​மான அளவில் அபராதங்​கள் விதிக்​கப்​படு​வதும் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன.

இந்த நீண்​ட​கால பிரச்​சினைக்கு தீர்​வு​காண மத்​திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலி​யுறுத்​தும். அதேசம​யம், மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​தை​யும், பொருளா​தார நிலைத் தன்​மை​யை​யும் வலுப்​படுத்​தும் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT