கோப்புப் படம்

 
தமிழகம்

தொலைதூர போக்குவரத்து சேவையில் தனியார் பேருந்துகளை பயன்படுத்த அரசு திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தனி​யார் பேருந்​துகளை தொலை​தூர சேவைக்கு பயன்​படுத்த போக்​கு​வரத்து துறை திட்​ட​மிட்​டுள்​ளது.

தீபாவளி, பொங்​கல் போன்ற பண்​டிகைக் காலங்​களில் அரசு சார்​பில் சிறப்​புப் பேருந்துகள் இயக்​கப்​பட்​டாலும் கூட்ட நெரிசலை சமாளிக்க, அரசுப் பேருந்துகளு​டன் தனியார் பேருந்​துகளை வாடகைக்கு எடுத்தது. அதன்​படி, பேருந்​துகள் மட் டும் தனி​யாரிடம் இருந்து வாங்கப்​படும். ஓட்​டுநர், நடத்​துநர்போக்​குவரது கழகம் நியமிக்கும்.

பேருந்து பராமரிப்பை தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​கள் செய்வர். இந்​நிலை​யில் தனி​யார் பேருந்​துகளை தொலை​தூரசேவைக்கு பயன்​படுத்த அதாவது அரசு பேருந்​துகள் மட்​டுமே அனு​ம​திக்​கப்​படும் தேசிய மயமாக்​கப்​பட்ட வழித்​தடங்​களில் தனி​யார் பேருந்​துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்​கு​வரத்து துறை முடிவு செய்​துள்​ளது.

சென்​னை​யில் இருந்து திருச்சி, மதுரை, நெல்​லை, கோவை உள்​ளிட்ட தொலை​தூர வழித்​தடங்​கள் தேசிய மயமாக்​கப்​பட்ட வழித்​தடங்​களாக உள்​ளன. தேசிய மயமாக்​கப்​பட்ட வழித்​தடங்​களுக்​குள்​ளும் சில நூறு கிலோ மீட்​டருக்கு உள் ளாக திறந்த வழித்தடம் இருக்​கும், திருச்சி - பெரம்​பலூர், விழுப்​புரம் - திருச்​சி, மதுரை -திரு​மங்​கலம் போல அந்த திறந்த பாதை​யின் எல்​லைக்​குள் மட்​டும் தேசிய நெடுஞ்​சாலைகளில் தனி​யார் பேருந்​துகள் அனு​ம​திக்​கப்​படும்.

தேசிய மயமாக்​கப்​பட்டவழித்​தடங்​களில் அரசு பேருந்​துகளை மட்​டுமே இயக்க முடி​யும். தனி​யார் பேருந்துகளில் ஆம்னி பேருந்​துகளுக்கு மட்​டும் தனி விதி​முறை என்​ப​தால் ஆம்னி பேருந்​துகள் தேசிய வழித்தடத்தை பயன்படுத்த அனு​மதி உண்​டு, சாதாரண தனி​யார் பேருந்​துகளுக்கு அனு​மதி இல்​லை. இந்​நிலை​யில் தேசியமயமாக்​கப்​பட்ட வழித்​தடங்​களில் தனி​யார் பேருந்​துகளை வாடகைக்கு எடுத்து அரசு சார்​பில் இயக்​கும் வகை​யில் வரைவு அறிக்கை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து 30 நாட்​கள்பொது​மக்​கள் தங்​கள் கருத்​துகளை தெரிவிக்​கலாம். வரைவு அறிக்கை ஏற்​கப்​பட்டு அரசாணை வெளி​யிடப்​பட்​டால் பண்​டிகை காலங்​களி​லும் சூரசம்​காரம் போன்ற விழாக்​களின் போதும் சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களில் இருந்து அரசு சார்​பில் தனி​யார்பேருந்​துகளை தொலை​தூர சேவைக்கு பயன்​படுத்த முடி​யும் என போக்​கு​வரத்​து துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT