தமிழகம்

அரசு ஊழியர் சொத்து விவரம் தாக்கல் செய்வது கட்டாயம்: அக்.31-க்குள் சமர்ப்பிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அரசு ஊழியர்​கள் தங்​கள் சொத்து மற்​றும் கடன் விவரங்​களை ஐஎப்​எச்​ஆர்​எம்​எஸ் (IFHRMS) தளத்​தில் அக்​டோபர் 31-ம் தேதிக்​குள் கட்​டா​யம் பதிவு செய்ய வேண்​டும் என்று தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து, தமிழக அரசு தலை​மைச் செயலர் சாய்​குமார், அனைத்து துறை​களின் செயலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்றறிக்கை​:

தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர்​களுக்​கான நடத்தை விதி​கள் 1973-ல் மேற்​கொள்​ளப்​பட்ட திருத்​தத்​தின் அடிப்​படை​யில், அரசு ஊழியர்​கள் தங்​களிடம் உள்ள அசை​யும் மற்​றும் அசையா சொத்​துகள், கடன்​கள், இதர பொறுப்​பு​கள் குறித்த விவரங்​களை ஆண்​டு​தோறும் தாக்​கல் செய்ய வேண்​டும்.

அதன்​படி, ஒருங்​கிணைந்த நிதி மற்​றும் மனிதவள மேலாண்மை அமைப்​பான ஐஎப்​எச்​ஆர்​எம்​எஸ் இணை​யதளத்​தில் சொத்​துகள் மற்​றும் கடன்​கள் குறித்த விவரங்​களை ஆன்​லைனில் தாக்​கல் செய்​வதற்​கான வசதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதில் நிலம், கட்​டிடம், அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பு, தனி வீடு உள்​ளிட்ட அசையா சொத்​துகளின் விவரங்​களை​யும், நகை, வங்கி வைப்​பு​கள் வாக​னங்​கள் உள்​ளிட்ட அசை​யும் சொத்​துகளின் விவரங்​களை​யும் பதிவு செய்ய வேண்​டும். கடன்​கள் மற்​றும் இதர பொறுப்​பு​கள் குறித்த விவரங்​களை​யும் பதிவு செய்ய வேண்​டும்.

அகில இந்​தி​யப் பணி அலு​வலர்​களை தவிர்த்​து, தங்​கள் நிர்​வாக கட்​டுப்​பாட்​டில் உள்ள அரசு ஊழியர்கள் 2025 டிசம்​பர் 31-ம் தேதி நில​வரப்​படி உள்ள சொத்​துகள், கடன்​கள் குறித்த அறிக்​கையை அக். 31-க்​குள் தாக்​கல் செய்ய வேண்​டும்.

வரும் காலங்​களில் ஒவ்​வொரு ஆண்​டும் டிசம்​பர் 31-ம் தேதி நில​வரப்​படி உள்ள சொத்​துகள் கடன்​கள் குறித்த அறிக்​கை​யை, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் தவறாமல் தாக்​கல் செய்ய வேண்​டும்.

SCROLL FOR NEXT