தமிழகம்

அரசு ஊழியர்கள் முன்பணம் பெறுவதற்கான நிபந்தனையில் தளர்வு: அக்.15 முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் நிதித்துறை (செலவினம்) செயலர் வி.அருண் ராய் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் கணினி, பைக் மற்றும் கார்வாங்குவதற்கு முன்பணம் பெறகுறைந்தபட்சம் 6 ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்திருக்கவேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், இந்த நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் அறிவித்தார். அதைசெயல்படுத்தும் விதமாக அந்தநிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, இனி தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து அரசு ஊழியர்களும் முன்பணம் கோரிவிண்ணப்பிக்கலாம். இந்த நடைமுறைகளை எளிமைப்படுத்தும் விதமாக, ஐஎஃப்ஆர்எம்எஸ் இணையதளம் மற்றும் களஞ்சியம் செல்போன் செயலி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

காலதாமதத்தைத் தவிர்ப்பதற்காக, நிதி ஒதுக்கீடு இனி கருவூலக் கணக்குத் துறை இயக்குநர் மூலம் நேரடியாக மேற்கொள்ளப்படும். இந்த நடைமுறை அக்.15-ம் தேதியில் இருந்துபெறப்படும் விண்ணப்பங் களுக்குப் பொருந்தும்.

இதேபோல், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான திருமண முன்பணத் தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த முன்பணத்தைப் பெற, திருமண நாளுக்கு 180 நாட்களுக்கு முன்பு முதல் விண்ணப்பிக்கலாம் என்று விதியிருந்தது.

இனி, திருமணம்முடிந்த நாளில் இருந்து 60 நாட்கள் வரையும் விண்ணப்பிக்கலாம் என்று விதி திருத்தப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் கடந்த அக்.15 முதல் பெறப்படும் விண்ணப் பங்களுக்கு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT