தமிழகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்​து, ரூ.99,200-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது.

தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்த நிலை​யில், டிச.12-ல் வரலாறு காணாத வகை​யில் பவுன் ரூ.98,960 ஆக உயர்ந்​தது. பின்​பு, டிச.15-ல் ஒரு லட்​சம் ரூபாயை தாண்​டி, மீண்​டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்​டது. அன்​றைய நாளில் ரூ.1 லட்​சத்து 120-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. இதைத் ​தொடர்ந்​து, ஏற்ற இறக்​க​மாக இருக்கிறது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்​து, ரூ.99,200-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஒரு கிராம் தங்​கம் ரூ.20 உயர்ந்​து, ரூ.12,400-க்கு விற்​கப்​பட்​டது. 24 காரட் தங்​கம் ரூ.1,08,216 ஆக இருந்​தது. அதே​நேரத்​தில்​,வெள்ளி விலை கணிச​மாக குறைந்​தது. வெள்ளி கிரா​முக்கு ரூ.5 குறைந்​து, ரூ.226 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்​து, ரூ.2 லட்​சத்து 26 ஆயிர​மாக இருந்​தது.

SCROLL FOR NEXT