தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

 
தமிழகம்

“திமுக அரசை தூக்கி எறிய வேண்டும்” - ஜி.கே.வாசன் ஆவேசம்

செய்திப்பிரிவு

மகளிருக்கு போது​மான பாது​காப்பு கொடுக்க முடி​யாத திமுக அரசை தூக்கி எறிய வேண்​டும் என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் பேசி​னார்.

ஒட்​டன்​சத்​திரம் தொகு​தி​யில், தமாகா வேட்​பாளர் விடியல் எஸ்​.சேகரை ஆதரித்​து, அக்​கட்​சி​யின் ஜி.கே.​வாசன் நேற்று பிரச்​சா​ரம் செய்​தார். அவர் பேசி​ய​தாவது: மக்​கள் விரோத, கொடுத்த வாக்​குறு​தி​களை நிறை​வேற்​றாமல் மக்​களின் கழுத்தை அறுத்த திமுக அரசை வீட்​டுக்கு அனுப்ப வேண்​டியது அவசி​யம். அவர்​களுக்​கான தண்​டனை, ஆட்சி மாற்​றத்தை கொடுப்​பது தான். விலை​வாசி உயர்​வு, குப்​பைக்கு கூட வரி என மக்​களின் மீது சுமையை அதி​கரித்​தது திமுக அரசு. மகளிருக்கு தமி​ழ​கத்​தில் பாது​காப்​பில்​லை.

          

தமி​ழ​கத்​தில் கொலை, கொள்​ளை, திருட்​டு, பாலியல் குற்​றங்​கள் அதி​கரித்​துள்​ளன. மகளிருக்கு பாது​காப்பு கொடுக்க முடி​யாத திமுக அரசை தூக்கி எறிய வேண்​டிய கடமை அவர்​களுக்கு இருக்​கிறது. தமி​ழ​கத்​தில் எந்த துறை​யிலும் முன்​னேற்​றம் இல்​லை. திமுக அரசு, மத்​திய அரசை எதிரி​யாக பார்க்​கிறது. இந்​தியா பாது​காப்​பான நாடாக இருக்​கிறது என்​றால், அதற்கு மோடி தான் காரணம். அதி​முக ஆட்​சிக்கு வந்​தவுடன் தமி​ழ​கத்​தில் 3 மாதங்​களில் போதைப் பொருட்​கள் ஒழிக்​கப்​படும். மக்​கள் விரோத, திமுக தீய சக்​தியை வீட்​டுக்கு அனுப்ப வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT