ஜி.கே.மணி | கோப்புப்படம் 
தமிழகம்

“உங்களுக்கு மனிதத்தன்மையே இல்லையா?” - அன்புமணிக்கு ஜி.கே.மணி கடும் கண்டனம்

இரா.தினேஷ்குமார்

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று மாலை பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:

பாமக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், சேலத்தில் வரும் 29-ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ராமதாஸ் தலைமையில் இக்கூட்டங்கள் நடைபெற இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில், கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பார் என்று தமிழகம் மற்றும் தேசிய அளவில் அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த, பெருமைமிக்க நிறுவனர் ராமதாஸை கொச்சைப்படுத்தும் நிகழ்வை பார்த்து நாங்கள் வேதனைப்படுகிறோம். பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் மற்றும் சேலம் மாநகர காவல்துறைக்கு அன்புமணி தரப்பு மனு அளித்துள்ளது. ராமதாஸ் நடத்தும் கூட்டம் செல்லாது, எந்த முடிவும் எடுக்க முடியாது என்று சொல்வதை கண்டிக்கிறோம்.

இப்படிச் சொல்வோர், பாமக யாரால் உருவாக்கப்பட்டது என்பதை நினைத்து பார்க்க வேண்டாமா..?, உங்களுக்கு மனிதத்தன்மையே இல்லையா..? போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்து, தேர்தல் ஆணையத்தில் உள்ள சிலரை கையில் வைத்துக் கொண்டு கடிதம் பெற்றுள்ளனர்.

தேர்தல் நெருங்கி வருவதால், விருப்ப மனுக்களை நாங்கள் பெற்றுள்ளோம். ‘பாமக என்னுடன் உள்ளது, எங்களுடன் கூட்டணி பேசுங்கள்’ என கூறி கபட நாடகம் நடத்துகின்றனர். இது உண்மையல்ல. மக்களை திசை திருப்பவே, ‘பொதுக்குழு நடத்துவதற்கு அனுமதியில்லை’ என்று கூறுகின்றனர். ராமதாஸ்தான் சக்தி. அவர் பின்னால் பாமகவினர் அனைவரும் நிற்க வேண்டும். திசை திருப்பும் கபட நாடகம் எடுபடாது. பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு காவல்துறை தடைவிதிக்காது.

ராமதாஸை கொச்சைப்படுத்தாதீர்கள், அவமானப்படுத்தாதீர்கள். அவர் வேதனைப்படுவதுடன் கண் கலங்குகிறார்.ஆனாலும் நீங்கள் இப்படி பேசுவதன் மூலம் ராமதாஸுக்கு வலிமை கூடி வருகிறது. வேகமாக செயல்பட களத்தில் இறங்கியுள்ளார். அவர் இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT