தமிழகம்

வேட்புமனுவில் தவறான தகவல்: உதயநிதி மீதான புகார் விசாரணை எப்போது? - ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திரு​வல்​லிக்​கேணி - சேப்​பாக்​கம் தொகு​தி​யில் திமுக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்று எதிர்​கட்​சித் தலை​வ​ராக பதவி வகிக்​கும் உதயநிதி ஸ்டா​லின், தனது வேட்​புமனு​வில் சொத்து விவரங்​களை மறைத்​துள்​ள​தால் மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்​டப்​படி அவர் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி தேனியைச் சேர்ந்த மிலானி என்​பவர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதி​மன்​றத்​தில் எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரி்க்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் கடந்த செப்.8 அன்று புகார் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

இந்த மனுவை ஒரு மாதம் கடந்​தும் ஜார்ஜ் டவுன் நீதி​மன்​றம் விசா​ரணைக்கு எடுத்​துக்​கொள்​ள​வில்லை எனக்​கூறி மிலானி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி வி. லட்​சுமி நாராயணன், மனு​தா​ரர் தாக்​கல் செய்​துள்ள மனுவை விசா​ரணைக்கு எடுக்க இன்​னும் எத்​தனை நாளாகும் என்​பது குறித்து ஜார்ஜ் டவுன் நீதி​மன்​றம் பதிலளி்க்க உத்​தர​விட்டு விசா​ரணையை வரும் அக்​.15-க்கு தள்ளி வைத்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT