தமிழகம்

“அமெரிக்காவின் வரி குறைப்பு பிரதமர் மோடியின் ராஜதந்திர வெற்றி” - ஜி.கே.வாசன் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: இறக்​குமதி வரியைக் குறைப்​ப​தாக அமெரிக்கா அறி​வித்​திருப்​பது, பிரதமர் மோடி​யின் ராஜதந்​திர நடவடிக்​கைக்கு கிடைத்த வெற்றி என்று தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் பாராட்​டியுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: இந்​தி​யா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​கள் மீதான வரியை 25 சதவீதத்​தில் இருந்து 18 சதவீத​மாக குறைப்​ப​தாக அமெரிக்க அரசு அறி​வித்​திருக்​கிறது.

          

இது பிரதமர் மோடியின் ராஜதந்​திரத்​தா​லும், மத்​திய வெளி​யுறவுத் துறை மற்​றும் வர்த்​தகத் துறை​யின் தொடர் முயற்​சி​யாலும் கிடைத்​திருக்​கும் வெற்​றி.

இதற்​காக பிரதமர், அமைச்​சர்​கள், அதி​காரி​களை பாராட்​டு​கிறோம். திமுக அளித்த வாக்​குறு​தி​கள் முழு​மை​யாக நிறைவேற்​றப்​பட​வில்​லை. கந்​தர்​வக்​கோட்டை அருகே துவார் கிராமத்​தில் சூரியஒளி மின்​ உற்​பத்திக்காக விளை நிலங்​களில் மின் கம்​பங்​களை நடு​வ​தால் விவ​சா​யிகளின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படும். எனவே, இதை தவிர்க்க வேண்டும்.

சம்பா சாகுபடி நெற்​ப​யிர்​கள் விரைந்து கொள்​முதல் செய்ய வேண்​டும். வறட்​சி​ மாவட்​டங்​களில் ஆறுகளைத் தூர்​வாரி, தடுப்​பணை​ அமைக்க வேண்​டும். நெல் குறைந்​த​பட்ச ஆதார விலையை குவிண்​டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி தர வேண்​டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT