தமிழகம்

குமார ராணி மீனா முத்தையாவுக்கு இறுதிச்சடங்கு: ஊர்வலத்தில் திரளாக பங்கேற்று பொதுமக்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

சென்னை: செட்​டி​நாடு அரசர் ராஜா சர் அண்​ணா​மலை செட்​டி​யாரின் பேத்​தி​யும், குமார ராஜா முத்​தையா செட்​டி​யாரின் மனை​வி​யு​மான குமார​ ராணி மீனா முத்தையா (93), சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்​யாஷ்ரமம் பள்​ளி, அடையாறில் குமார ராணி மீனா முத்தையா மேல்நிலைப் பள்ளி, அதேபோல், குமார ராணி மீனா முத்தையா கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி உள்​ளிட்ட பல கல்வி நிறு​வனங்​களை​ தொடங்கி கல்வி உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

இந்நிலையில், குமார ​ராணி மீனா முத்​தையா வயது மூப்பு காரணமாக ஊட்​டி​யில் நேற்று முன்தினம் கால​மா​னார். இதையடுத்து, அவரது உடல் கோவை​யில் இருந்து விமானத்​தி்ல் சென்னை கொண்​டு​வரப்​பட்​டு, ராஜா அண்​ணாமலைபுரத்​தில் உள்ள செட்​டி​நாடு மாளி​கை​யில் உறவினர்​கள், நண்​பர்​கள் அஞ்​சலிக்​காக நேற்று வைக்​கப்​பட்​டது.

குமார ராணி மீனா முத்தையா உடலுக்கு கல்வியாளரகள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்​தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

நேற்று காலை செட்​டி​நாடு மாளி​கை​யில் இருந்து குமாரராணி மீனா முத்​தை​யா​வின் உடல் ஊர்​வலமாக மயிலாப்பூர் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவரது இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதியாக, மயிலாப்பூர் மயானத்தில் குடும்ப உறுப்பினர்கள் சூழ, குமார ராணி மீனா முத்தையாவுக்கு இறு​திச் சடங்​கு​கள் நடைபெற்றன.

SCROLL FOR NEXT