தமிழகம்

கூட்டுறவு நூற்பாலைகளின் உற்பத்தியை அதிகரிக்க புதிய இயந்திரங்கள், உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ய ரூ.14 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இயங்கும் கூட்​டுறவு நூற்​பாலைகளின் உற்​பத்​தித்​திறனை அதி​கரிக்க புதிய இயந்​திரங்​கள், உதிரி பாகங்​கள் கொள்​முதல் செய்ய ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை​யிட்​டுள்​ளது.

இது​குறித்து அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப் பேரவை​யில் 2026-27-ம் ஆண்​டுக்​கான கைத்​தறி மற்​றும் துணிநூல் துறை மானியக் கோரிக்​கை​யில் அமைச்​சர் விஜய் பாலாஜி பேசும்போது, தமிழகத்​தில் துணிநூல் துறை​யின்​கீழ் இயங்​கிவரும் ஆறு கூட்​டுறவு நூற்​பாலைகளைச் சீரமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்டு, புதிய இயந்​திரங்​கள் மற்​றும் அத்​தி​யாவ​சிய உதிரி பாகங்​கள் தேசிய கூட்​டுறவு வளர்ச்​சிக் கழக நிதி​யுத​வியுடன் கொள்​முதல் செய்​யப்​படும் என்று அறி​வித்​திருந்தார்.

இந்த அறி​விப்​புக்​கிணங்க கூட்​டுறவு நூற்​பாலைகளின் நலன் கருதி, துணிநூல் துறை​யின் கீழ் இயங்​கும் ஆறு கூட்​டுறவு நூற்​பாலைகளின் உற்​பத்​தித் திறன் மற்​றும் தரத்​தினை அதி​கரிக்க, புதிய இயந்​திரங்​கள் மற்​றும் இயந்​திர உதிரி பாகங்​கள் ரூ.14 கோடி மதிப்​பில், தேசிய கூட்​டுறவு வளர்ச்​சிக் கழக நிதி​யுத​வியுடன், கொள்​முதல் செய்ய அரசால் ஆணை​யிடப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT