தமிழகம்

கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளுக்கான அரசு டெண்டர் நடைமுறைகளில் முழு வெளிப்படைத்தன்மை வேண்டும்: முதல்வருக்கு இந்திய கட்டுநர் சங்கம் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: கட்​டு​மானம் மற்​றும் உள்​கட்​டமைப்பு பணி​களுக்​கான அரசு டெண்​டர் நடை​முறை​களில் முழு​மை​யான வெளிப்​படைத்​தன்மை உறு​தி​செய்​யப்பட வேண்​டும் என்​று, தமிழக முதல்​வருக்​கு, இந்​திய கட்​டுநர் சங்​கம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

இதுதொடர்​பாக, அகில இந்​திய கட்​டுநர் வல்​லுநர் சங்​கத்​தின் மாநில தலை​வர் என்​.​ராமலிங்​கம், தமிழக முதல்​வர் விஜய்க்கு அனுப்​பி​யுள்ள மனு: தமிழகத்​தில் தங்​களின் தலை​மையி​லான புதிய அரசு, நிர்​வாகம், வெளிப்​படைத்​தன்​மை, தொழில்​வளர்ச்சி மற்​றும் உள்​கட்​டமைப்பு மேம்​பாட்​டில் புதிய முன்​னேற்​றத்தை ஏற்​படுத்​தும் என்ற நம்​பிக்கை எங்​களுக்கு இருக்​கிறது.

கட்​டு​மானம் மற்​றும் உள்​கட்​டமைப்பு துறை, அதிக எண்​ணிக்​கையி​லான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​குவதோடு, நாட்​டின் ஒட்​டுமொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் (ஜிடிபி) முக்​கிய பங்கு வகிக்கிறது. இத்துறையின் தொழில் வளர்ச்​சிக்​கு கீழ்க்​காணும் கோரிக்​கைகளை முன்​வைக்​கிறோம்.

கட்​டு​மானம் மற்​றும் உள்​கட்​டமைப்பு பணி​களுக்​கான அனைத்து அரசு டெண்​டர் நடை​முறை​களி​லும், முழு​மை​யான வெளிப்​படைத் தன்மை உறுதி செய்​யப்பட வேண்​டும்.

நிதி ஒதுக்​கீடு மற்றும் நிர்​வாக அனு​மதி உறுதி செய்யப்​பட்ட பின்​னரே, டெண்​டர் அறி​விப்​பு​கள் வெளி​யிடப்பட வேண்​டும். கட்​டு​மானம் மற்​றும் உள்​கட்​டமைப்​புக்​கென தனி அமைச்​சகம் உரு​வாக்​கப்பட வேண்​டும். கட்​டு​மான தொழிலா​ளர்​களுக்​கான நலத்​திட்ட உதவி​கள் மேலும் வலுப்​படுத்​தப்பட வேண்​டும்.

கட்​டு​மான பொருட்​களின் விலை நிலைத்​தன்​மை, தரம் மற்​றும் தடை​யில்​லாமல் பொருட்​கள் கிடைப்​பது உறுதி செய்​யப்​படும் வகை​யில் ஒரு ஒழுங்​கு​முறை ஆணை​யம் அமைக்​கப்பட வேண்​டும்.

சிஎம்​டிஏ, டிடிசிபி, ரெரா மற்​றும் இதர அரக துறை​களின் அனு​ம​தி​களை விரை​வாக வழங்​கு​வதற்​காக, அனைத்து துறை​களின் ஒருங்​கிணைந்த ஒற்​றைச்​சாளர முறை அமல்​படுத்​தப்பட வேண்​டும்.

தற்​போது கடுமை​யாக இருக்​கும் ரெரா அமைப்​பின் நடை​முறை​கள் மற்​றும் அதிக அபராத விதி​முறை​கள் எளிமைப்​படுத்​தப்பட வேண்​டும். திட்​ட​கால நீட்​டிப்பு அனு​ம​தி​களில் விதிக்​கப்​படும் கூடு​தல் டெபாசிட் தொகைகள் திருத்​தி​யமைக்​கப்பட வேண்​டும்.

கழி​வுநீர், குடிநீர் மற்​றும் பிற பயன்​பாட்டு சேவை அனு​ம​தி​கள் விரை​வாக வழங்​கப்பட வேண்​டும். திட்ட செயல்​பாட்டை பாதிக்​கும் வகை​யில் அடிக்​கடி மாற்​றப்​படும் விதி​முறை​கள் தவிர்க்​கப்​பட்டு நிலை​யான நடை​முறை​கள் பின்​பற்​றப்பட வேண்​டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT