தமிழகம்

தாம்பரம் - நாகர்கோவில் ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கம்

செய்திப்பிரிவு

பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - நாகர்கோவில் ரயில் உள்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

நாகர்கோவில் இருந்து இன்று (7-ம் தேதி) இரவு 11.15 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06012) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து நாளை (8-ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06011) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.

கோயம்புத்தூரில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (06024) புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை நண்பகல் 12.20 மணிக்கு சிறப்பு ரயில்(06023) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.30 மணிக்கு கோயம்புத்தூரை அடையும்.

திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்பு ரயில் (06108) புறப்பட்டு, நாளை முற்பகல் 11.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை மதியம் 1.50 மணிக்கு சிறப்பு ரயில் (06107) புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும்.

இந்த சிறப்பு ரயில் பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, போத்தனூர், பாலக்காடு வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இத்தகவல், தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT