பிரதிநிதித்துவப் படம்: மெட்டா ஏஐ
சென்னை: சென்னையில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோருக்கு இலவசமாக விரிவான கண் பரிசோதனை அக்டோபர் 1 மற்றும் அக்டோபர் 15 ஆகிய வியாழக்கிழமைகளில் ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் நடத்துகிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட தகவல்: இந்தப் பரிசோதனை, ‘கல்பவிருக்ஷா சென்டர், எண் 3, நாகரத்தினம்மாள் காலனி, ஆதி கேசவ பெருமாள் கோயில் அருகில், மேற்கு மாம்பலம், சென்னை’ என்ற முகவரியில் நடைபெறும். வயது சார்ந்த கண் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.
முதியோரின் பார்வை, சுயசார்பு, நடமாட்டம், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதில் வழக்கமான கண் பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் ஒவ்வொரு முதியவருக்கும் போதுமான நேரம் ஒதுக்கி, தனிப்பட்ட கவனம், அக்கறை மற்றும் விரிவான கண் பராமரிப்புடன் பரிசோதனை மற்றும் தேவையான வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த சேவை முற்றிலும் இலவசம். முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு...
வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் மட்டுமே முன்பதிவு செய்யலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, செப்டம்பர் 28 மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். முதியவரின் பெயர், வயது மற்றும் விருப்பமான பரிசோதனை தேதி (அக்டோபர் 1 அல்லது அக்டோபர் 15*) ஆகியவற்றை 97104 85295 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பலாம். குடும்ப உறுப்பினர் அல்லது பராமரிப்பாளரும் முதியவரின் சார்பில் முன்பதிவு செய்யலாம்.
முதியோர் மற்றும் போதிய கண் பராமரிப்பு கிடைக்காத சமூகத்தினருக்கு விரிவான முறையிலும் கண் சேவைகளை வழங்க வேண்டும் என்ற ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் நோக்கத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.