தமிழகம்

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 2026-27-ம் நிதியாண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் மொத்த பாசனப்பரப்பில் 55 சதவீத நிலங்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் பாசன நீரானது ஆறுகள் வழியே கிடைக்கிறது. மீதமுள்ள 45 சதவீத நிலங்களுக்கு கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை எடுப்பதற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே உற்பத்திச் செலவு கூடுதலாவதைக் கருத்தில் கொண்டு இலவச மின்சாரத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

மின் இணைப்புக்காக காத்திருப்பு: அதன்படி, கட்டணமில்லா வேளாண் உரிமை மின்சாரத் திட்டத்தின் கீழ் 23.65 லட்சம் மின் இணைப்புகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாதாரண திட்டம் முதல் கட்டணத் திட்டம் வரை முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். அதேபோல், 2023-ம் ஆண்டில் 12,566 விவசாயிகள் ரூ.250 கோடி செலுத்தி தட்கால் திட்டத்தில் காத்திருந்த நிலையில், 2025-ம் ஆண்டும் 47,554 விவசாயிகள் தட்கல் விண்ணப்பித்து காத்தி ருக்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் 50 ஆயிரம் புதிய வேளாண் இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அறிவித்திருந்தார்.

அதன்படி, தமிழக அரசு புதிய இலவச மின்இணைப்புகளுக்கான அரசா ணையை வெளியிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளில் 3,215 இலவச இணைப்புகள், சாதாரணப் பிரிவில் 16,785 இணைப்புகள், சுயநிதித் திட்டத்தில் 3,372 இணைப்புகள், விரைவு மின் இணைப்புத் திட்டத்தில் 25,282 (தட்கல்) இணைப்புகள், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் 1,346 இணைப்புகள் என மொத்தம் 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.

ஒவ்வொரு இணைப்புக்கும் சராசரியாக ரூ.1.5 லட்சம் வீதம், மொத்தம் ரூ.750 கோடி செலவில் விவசாய மின் இணைப்புகளை வழங்க மற்றும் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், விவசாய மின் இணைப்புகளுக்காக ஆண்டுக்கு ரூ.127.56 கோடியை மானியமாக அரசு வழங்கும்.

முறைகேடுகள் குறித்து ஆய்வு: இதற்கிடையே, ஏற்கெனவே வழங்கப்பட்ட விவசாய மின் இணைப்புகளில் முறைகேடுகள் உள்ளனவா என ஆய்வு செய்து, தவறாகப் பயன்படுத்தப்படும் இணைப்புகளை நீக்கவும் மின்வாரியத்துக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட 7,313 இணைப்பு களும் 50 ஆயிரம் இணைப்பு களுக்கான இலக்கில் அடங்கும்.

அன்புமணி வரவேற்பு: இதற்கிடையே இலவச மின்இணைப்பு அறிவிப்பை பாமக தலைவர் அன்புமணி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் நடப்பாண்டில் 50 ஆயிரம் பேருக்கு பல்வேறு பிரிவுகளில் இலவச வேளாண் மின் இணைப்புகளை வழங்குவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.127.56 கோடி மானியத்தை அரசே ஏற்க இருப்பதும் வரவேற்கத்தக்கது.

இலவச மின் இணைப்புக்காக 4 லட்சத்துக்கும் மேற்பட்டவிவசாயிகள் காத்திருக் கிறார்கள். தற்போது ஆண்டுக்கு 40 ஆயிரம் இலவச மின் இணைப் புகள் மட்டுமே வழங்கப்படு கின்றன. இது போதுமானதல்ல. ஆண்டுக்கு 1 லட்சமாக எண்ணிக்கையை உயர்த்த வேண் டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT