லால்குடியில் கிறிஸ்துராஜ் வீட்டில் சோதனை நடந்த போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர்.

 
தமிழகம்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மோசடி: தமிழகத்தில் 18 இடங்களில் சோதனை

அமலாக்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: ​பாலிடெக்​னிக் விரிவுரை​யாளர் தேர்​வில் முறை​கேடு நடந்​தது தொடர்​பான வழக்​கில், தமிழகம் முழு​வதும் 18 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை மேற்​கொண்​டனர். அப்​போது முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் கடந்த 2017-ம் ஆண்டு அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களில், காலி​யாக இருந்த 1,058 விரிவுரை​யாளர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​காக ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) சார்​பில் போட்​டித் தேர்வு நடத்​தப்​பட்​டது. சுமார் 1.33 லட்​சம் பேர் தேர்வு எழு​தினர். தேர்வு முடிவு​கள் 2017-ம் ஆண்டு நவம்​பர் மாதம் வெளி​யிடப்​பட்​டன.

தேர்வு முடிவு​கள் வெளி​யானதும், பல்​வேறு முறை​கேடு​கள் நடை​பெற்​றிருப்​ப​தாகத் தேர்​வர்​கள் குற்​றம் சாட்​டினர். குறிப்​பாக, சிலருடைய மதிப்​பெண்​கள் முறை​கே​டாக உயர்த்​தப்​பட்​ட​தாக​வும், பணம் பெற்​றுக் கொண்டு தகுதி இல்​லாதவர்​களுக்​குத் தேர்ச்சி வழங்​கப்​பட்​ட​தாக​வும் புகார்​கள் எழுந்​தன. இந்த முறை​கேட்​டில் தொடர்​புடைய​வர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் தேர்​வர்​கள் வலி​யுறுத்​தினர்.

இதையடுத்​து, ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் அப்​போதைய உறுப்​பினர் செயலர் உமா, சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​தார். அதன் அடிப்​படை​யில், சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கினர். விசா​ரணை​யில், தேர்​வுக்​கான விடைத் தாள்​கள் மற்​றும் மதிப்​பெண் பட்​டியல்​களைத் தயாரித்த டெல்​லியைச் சேர்ந்த தனி​யார் நிறு​வனத்​தின் செயல்​பாடு​கள் சந்​தேகத்​துக்கு உரிய​தாக இருப்​பது தெரிய வந்​தது.

இதையடுத்​து, தேர்​வில் முறை​கேடு செய்​த​தாக 156 பேருக்கு எதி​ராக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. இந்த முறை​கேட்​டில் தரகர்​கள், டேட்டா என்ட்ரி நிறுவன ஊழியர்​கள், அரசு ஊழியர்​கள் என 19-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களில் சிலர் மீது குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

பாலிடெக்​னிக் விரிவுரை​யாளர் பணி​யிடங்​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி, ஒரு​வரிடம் ரூ.25 லட்​சம் முதல் ரூ.35 லட்​சம் வரை வசூலிக்​கப்​பட்​ட​தாக​வும், மொத்​த​மாக ரூ.50 கோடிக்​கும் அதி​க​மான தொகை கைமாறி இருக்​கலாம் என்​றும் விசா​ரணை​யில் தெரிய வந்​தது. இந்த முறை​கேட்​டில் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை நடை​பெற்​ற​தாக எழுந்த குற்​றச்​சாட்​டின் அடிப்​படை​யில், அமலாக்​கத் துறை (இடி) அதி​காரி​களும் விசா​ரணை​யில் இறங்​கினர்.

பணமோசடி தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்த அமலாக்​கத் துறை அதி​காரி​கள், சென்​னை, திருச்​சி உள்​ளிட்ட தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் மொத்​தம் 18 இடங்​களில் நேற்று காலை முதல் திடீர் சோதனை நடத்​தினர். சென்​னையைப் பொறுத்த வரை கொளத்​தூர் விநாயகபுரம் சிவாஜி நகரில் உள்ள ரகுப​தி, பெர​வள்​ளூர் எஸ்​ஆர்பி காலனி​யில் உள்ள விநாயகமூர்த்​தி, மேற்கு அண்ணா நகர் 5-வது தெரு​வில் வசிக்​கும் செந்​தில் குமார், புதுப்​பேட்​டை​யில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் வசிக்​கும் முகமது இஸ்​மா​யில் ஆகியோர் வீடு​களி​ல் சோதனை நடை​பெற்​றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திமுகவைச் சேர்ந்த கிறிஸ்துராஜ், லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஆங்கரை கவுன்சிலராக இருந்தவர். லால்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். இவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் 4 பேர், நேற்று பிற்பகல் 1 மணி முதல் இவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல் பொள்ளாச்சி மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் குணசேகரனின் குரும்பபாளையத்தில் உள்ள வீட்டில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு மோசடி தொடர்பாக ஏற்கெனவே, குணசேகரனைப் போலீஸார் கைது செய்தனர். தற்போது சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

ஆவணங்கள் பறிமுதல்: தமிழகம் முழு​வதும் நடத்​தப்​பட்ட சோதனை​யின் போது முக்​கிய ஆவணங்​கள், வங்​கிப் பணப்​பரிவர்த்​தனை பதிவு​கள், மின்​னணு சாதனங்​கள் மற்​றும் சொத்து தொடர்​பான ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாகத் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. இந்​தச் சோதனை​யின் முடி​வில் மேலும்​ பல முக்​கிய தகவல்​கள்​ வெளி​யாகலாம்​ என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT