தமிழகம்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: முன்னாள் எம்எல்ஏ சத்யா நீதிமன்றத்தில் ஆஜர்

செய்திப்பிரிவு

சென்னை: வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக பதி​யப்​பட்ட வழக்​கில் தி.நகர் முன்​னாள் எம்​எல்ஏ சத்யா தனது மனை​வி​யுடன் சென்னை சிறப்பு நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார்.

கடந்த 2016 - 21 கால​கட்​டத்​தில் சென்னை தி.நகர் அதி​முக எம்​எல்​ஏ-​வாக பதவி வகித்​தவர் பி.சத்யா என்ற சத்​ய​நா​ராயணன். இவர் தனது பதவிக்​காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.9.41 கோடி அளவுக்கு சொத்து சேர்த்​த​தாக சத்​ய​நா​ராயணன் மற்​றும் அவரது மனைவி ஜெயசித்ரா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் கடந்த 2023-ல் வழக்​குப்​ப​திவு செய்​தனர்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வலக வளாகத்​தில் உள்ள எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஆர்​.சண்​முகசுந்​தரம் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது முன்​னாள் எம்​எல்ஏ சத்​ய​நா​ராயணன், அவரது மனைவி ஜெயசித்ரா ஆகிய இரு​வரும் ஆஜராகினர். லஞ்ச ஒழிப்​புத் துறை தரப்​பில், இந்த வழக்​கில் அரசுத் தரப்​பில் 130 சாட்​சிகளிடம் விசா​ரிக்​கப்​பட்​டு, 132 சான்று ஆவணங்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக வாதிடப்​பட்​டது.

குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் தரப்​பில், வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து குவிப்​பில் ஈடு​பட்​டுள்​ள​தாக தங்​கள் மீது போலீ​ஸார் தவறாக வழக்​குப்​ப​திவு செய்​துள்​ள​தாக​வும், இந்த வழக்​கி​லிருந்து தங்​களை விடுவிக்​கக்​கோரி மனுத் தாக்​கல் செய்​துள்​ள​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிபதி இந்த வழக்கு வி​சா​ரணையை வரும் ஜூலை 17-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT