இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து கடிதம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.
சென்னை: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடிதம் வழங்கினர்.
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளும் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், மீண்டும் அவற்றில் வெல்ல அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேற்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.
2 தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எழுதிய கடிதத்தை நயினார் நாகேந்திரனிடம் கே.பி.முனுசாமி வழங்கினார். தொடர்ந்து, மற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட அதிமுக திட்டமிட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது: கடந்த தேர்தலில் மக்கள் அதிமுகவை நம்பி வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால், வெற்றி பெற்றவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டனர்.
மீண்டும் மக்கள் நம்பிக்கையோடு அதிமுக வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உறுதியாக வெற்றி பெறுவார்கள். எங்கள் கடிதத்தை பாஜக தலைவர் இன்முகத்தோடு பெற்றுக்கொண்டார். கட்சித் தலைமையுடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்” என தெரிவித்தார்.இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருமாறு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடிதம் வழங்கினர்.
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளும் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், மீண்டும் அவற்றில் வெல்ல அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேற்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.
2 தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி எழுதிய கடிதத்தை நயினார் நாகேந்திரனிடம் கே.பி.முனுசாமி வழங்கினார். தொடர்ந்து, மற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட அதிமுக திட்டமிட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் கே.பி.முனுசாமி கூறியதாவது: கடந்த தேர்தலில் மக்கள் அதிமுகவை நம்பி வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால், வெற்றி பெற்றவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டனர்.
மீண்டும் மக்கள் நம்பிக்கையோடு அதிமுக வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உறுதியாக வெற்றி பெறுவார்கள். எங்கள் கடிதத்தை பாஜக தலைவர் இன்முகத்தோடு பெற்றுக்கொண்டார். கட்சித் தலைமையுடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்” என தெரிவித்தார்.