தமிழகம்

“அதிமுக ஆட்சியில் மனைவியோடும், காதலியோடும் ஆண்கள் இலவசமாக பேருந்தில் செல்லலாம்” - ராஜேந்திர பாலாஜி

செய்திப்பிரிவு

சிவகாசியில் அதிமுக மகளிரணி சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட மகளிரணி செய லாளர் சுபாஷினி தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: அதிமுக ஆட்சி அமைந்ததும் பாகுபாடு இன்றி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க முதல் கையெழுத்திடுவார் பழனிசாமி. ஆண்கள் மனைவி யோடும், காதலியோடும் இலவசமாக (ஓசியில்) அரசுப் பேருந்தில் செல்லலாம். அதிமுகவின் தேர்தல் அறிக்கையைக் கண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார்.

ஜனவரி 23-ம் தேதி பிரதமர் பங்கேற்கும் மேடையில் கூட்டணியில் சேர எத்தனை கட்சிகள் மேடை ஏறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள், இவ்வாறு அவர் பேசினார்.

          
SCROLL FOR NEXT