தமிழகம்

காவிரி பிரச்சினையில் அரசுக்கு ஆதரவு அளிக்க அனைத்து கட்சிகளும் தயார்: முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: திமுக முன்​னாள் அமைச்​சர் ரகுபதி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக தலை​வர் ஸ்டா​லின் உத்​தர​வின் பேரில், காவிரி நீரை உடனடி​யாக தமிழகத்​துக்கு விடுவிக்க உச்ச நீதி​மன்​றத்​தில் திமுக சார்​பில் அவசர மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

ஆனால், தமிழக எதிர்க்​கட்​சிகள் கர்நாடகா​வுக்கு ஆதர​வாக செயல்​படு​வது​போல சட்​டத் துறை அமைச்​சர் நிர்​மல் குமார் கொச்​சைப்​படுத்தி பேசி​யுள்​ளார்.

முதல்​வர் விஜய், நீர்​வளத் துறை அமைச்​சர் ஆனந்த் ஆகியோர் காவிரி, மேகே​தாட்டு அணை தொடர்​பாக இது​வரை வெளிப்​படை​யாக எந்த கருத்​தும் கூற​வில்​லை.

தமிழக அரசி​யல் கட்​சிகள் குறித்த அமைச்​சர் நிர்​மல் குமாரின் கருத்​தை​யும், அனைத்​துக் கட்சி கூட்​டம் தேவை​யில்லை எனும் அவரது

நிலைப்​பாட்​டை​யும் அவர்​கள் ஏற்​றுக் கொள்​கின்​றனரா என்பதை மக்​களுக்கு தெளிவு படுத்த வேண்​டும்.

தமிழகத்​தில் உடனே அனைத்​துக் கட்​சிக் கூட்டம் கூட்​டி, உச்ச நீதி​மன்​றத்தில் தமிழகத்​தின் காவிரி உரிமையை நிலை​நாட்​டும் வகை​யில் அரசு தீவிர​மாக செயல்பட வேண்​டும்.

காவிரி பிரச்​சினை​யில் அரசுடன் ஒத்​துழைக்​க​வும், ஆலோ​சனை கூற​வும் தமிழகத்​தில் உள்ள அனைத்து கட்​சிகளும் தயா​ராகவே இருக்​கின்​றன என்று அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT