காஞ்சிபுரம்: நெல்லுக்காரத் தெருவில் அமைந்துள்ள சித்ரகுப்த சுவாமி கோயிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கடந்த ஏப்.23-ம் தேதி நடந்த தேர்தலிலேயே மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கிவிட்டனர். அந்தத் தீர்ப்பு அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.
இந்தத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு, கட்சித் தொடங்கித் தொடர்ந்து வெற்றி பெற்றவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மட்டுமே.
அதிமுகவின் வாக்குச் சதவீதத்தை யாராலும் கைப்பற்ற முடியாது என்ற நிலையோடு தேர்தல் முடிவுகள் வரும்” என்றார்.